கே. ஒய். வெங்கடேசு
தனிநபர் தகவல் | |
---|---|
தேசியம் | இந்தியர் |
பிறப்பு | பெங்களூரு, இந்தியா |
தொழில் | பாரா ஒலிம்பிக் தடகள வீரர் |
உயரம் | 127 cm |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
மாற்றுத்திறனாளர் | ஆம் |
கே. ஒய். வெங்கடேசு (K. Y. Venkatesh) என்பவர் இந்தியாவின் கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த இந்திய பாரா-தடகள வீரர் மற்றும் குண்டு எறிதல் வீரர் ஆவார்.[1][2][3] வெங்கடேசு 4 அடி 2 அங்குல உயரத்துடன் எலும்பு வளர்ச்சிக் குறை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் 1999ஆம் ஆண்டு ஆத்திரேலியாவில் நடந்த குண்டு எறிதலில் இந்தியாவுக்காகத் தனது முதல் தங்கத்தை வென்றார். 1994இல், ஜெர்மனியின் பெர்லினில் நடந்த முதலாவது பன்னாட்டு பாராலிம்பிக் குழு (ஐபிசி) உலக தடகள உலகபோட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இவரது திறமைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்திய அரசு, இவருக்கு 2021-ல் இந்தியாவின் குடிமக்களுக்கான நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருதினை வழங்கியது.[4][5]
வெங்கடேசு லிம்கா சாதனைகள் புத்தகத்திலும்இடம் பெற்றுள்ளார்.[6] 2005-ல் நான்காவது உலக குள்ளர் விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் ஆறு பதக்கங்களை வென்று உலக சாதனை படைத்தார்.
வெங்கடேசு எல். ஜி. உலக இறகுப்பந்தாட்டம் கோப்பை 2002-ல் வெள்ளிப் பதக்கத்தையும், 2004 திறந்த தடகள வாகையாளர் போட்டியில் குண்டு எறிதல், வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் ஆகியவற்றில் 3 தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றார். 2004 சுவீடன் தடகள ஆட்டத்தில் ஒரு தங்கப் பதக்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.
2006-ல் ஐரோப்பிய திறந்த வாகையாளர் மட்டைப்பந்து போட்டியில் தங்கப் பதக்கத்தையும், கால்பந்து மற்றும் கூடைப்பந்து போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களையும், இறகுப்பந்தாட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். மாற்றுத்திறனாளிகளுக்கான கர்நாடக பாரா-இறகுப்ந்தாட்ட சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.[7]
சாதனைகள்
[தொகு]- 2012 எசுபானியத்தில் நடைபெற்ற பாரா-பூப்பந்தாட்டம் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்
- வட்டு எறிதலில் தங்கப் பதக்கம் மற்றும் ஈட்டி எறிதல், பூப்பந்தாட்டம் ஒற்றையர் மற்றும் 2009 உலக குள்ள விளையாட்டுப் போட்டிகளின் இரட்டையர் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றார்.
- 2008 ஆசிய பாராலிம்பிக் கோப்பையின் பூப்பந்தாட்ட ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளில் வெண்கலம் மற்றும் தங்கப் பதக்கங்களை வென்றார்.
- மட்டைப்பந்து போட்டியில் தங்கப் பதக்கமும், கால்பந்து மற்றும் கூடைப்பந்து போட்டிகளில் வெள்ளிப் பதக்கமும், 2006 ஐரோப்பிய திறந்த வாகையாளர் பூப்பந்தாட்ட போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.
- 2005 குள்ள ஒலிம்பிக்கில் வட்டு எறிதலில் தங்கப் பதக்கம் மற்றும் குண்டு எறிதல், கூடைப்பந்து மற்றும் பூப்பந்து போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
- 2004 இசுரேல் திறந்த பூப்ப்பந்தாட்ட வாகையாளர் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றார்
- 2004 தடகள போட்டிகளில் குண்டு எறிதல், வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் ஆகியவற்றில் 3 தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.
- 2004 சுவீடன் திறந்த தடகள போட்டியில் தங்கப் பதக்கம், 2 வெள்ளிப் பதக்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்றார்.
- 2002 எல்ஜி உலகக் கோப்பையின் பூப்பந்தாட்ட போட்டியில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்றார்
- 1999 தெற்கு குறுக்கு பல குறைபாடு வாகையாளர் போட்டியில் குண்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
விருதுகள் மற்றும் அங்கீகாரம்
[தொகு]இந்திய அரசு இவருக்கு 2021ஆம் ஆண்டு இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமக்களுக்கான விருதான பத்மசிறீ விருதை வழங்கியது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Singh, Tanaya (February 26, 2016). "A Man with Dwarfism Heard about a Woman with Polio Crossing the English Channel. Then He Did This". The Bettr India. https://www.thebetterindia.com/47045/k-y-venkatesh-para-sportsman-khudkokarbuland/.
- ↑ Dutta, Sudeshna (January 23, 2021). "Malleswaram Mirror Special: An extraordinary life". Bangalore Mirror. https://bangaloremirror.indiatimes.com/bangalore/others/malleswaram-mirror-special-an-extraordinary-life/articleshow/80415032.cms.
- ↑ Chatterjee, Soumya (October 15, 2017). "Make Bengaluru disabled friendly: A para-athlete's passionate plea at city's Beku Beda Santhe". தி நியூஸ் மினிட். https://www.thenewsminute.com/article/make-bengaluru-disabled-friendly-para-athlete-s-passionate-plea-city-s-beku-beda-santhe.
- ↑ 4.0 4.1 Poovanna, Sharan (January 26, 2021). "Athlete gets Padma award for showing the way, promoting para-sports". ஹிந்துஸ்தான் டைம்ஸ். https://www.hindustantimes.com/india-news/athlete-gets-padma-award-for-showing-the-way-promoting-parasports-101611660323328.html.
- ↑ "Padma Shri for para warrior Venkatesh". January 27, 2021. https://timesofindia.indiatimes.com/sports/more-sports/others/padma-shri-for-para-warrior-venkatesh/articleshow/80473346.cms.
- ↑ "World Dwarf Games". coca-colaindia.com. 2017. Archived from the original on 2021-11-14. பார்க்கப்பட்ட நாள் 2021-11-14.
- ↑ Chatterjee, Sayan (January 26, 2021). "Para-athlete and Limca Record holder K.Y. Venkatesh awarded Padma Shri". The Bridge. https://thebridge.in/athletics/para-athlete-and-limca-record-holder-k-y-venkatesh-awarded-padma-shri/.