கே.எல். சிறீமாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே.எல். சிறீமாலி
13th துணை வேந்தர், பனாரசு இந்து பல்கலைக்கழகம்
பதவியில்
1 நவம்பர் 1969 – 31 சனவரி 1977
நியமிப்புவி. வி. கிரி
முன்னையவர்ஏ.சி. ஜோசி
பின்னவர்மோதிலால் தார்
2 ஆவது கல்வித்துறை அமைச்சர் (இந்தியா)
பதவியில்
22 சனவரி 1958 – 31 ஆகத்து 1963

கலு லால் சிறீமாலி (K. L. Shrimali) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மத்திய கல்வி அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் கல்வியாளராகவும் இவர் இருந்தார்.

1909 ஆம் ஆண்டு இராசத்தான் மாநிலத்தின் உதய்பூரில் சிறீமாலி பிறந்தார். பனாரசு இந்து பல்கலைக்கழகம், கல்கத்தா பல்கலைக்கழகம் மற்றும் நியூயார் நகரத்திலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகம்ஆகியவற்றில் கல்வி பயின்றார்.

1955 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 1963 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் வரை மத்திய அமைச்சர்கள் குழுவில் கல்வி அமைச்சராக பணியாற்றினார். 1952 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சிறீமாலி இராசத்தான் மாநிலத்தின் மாநிலங்களவையை பிரதிநிதித்துவப்படுத்தினார் [1]

பல கல்வி மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்தார். "இயன் சிக்சன் " என்ற மாதாந்திர கல்வி இதழின் ஆசிரியராகவும் இருந்தார். பல நூல்களை வெளியிட்டுள்ளார். இராசத்தானின் உதய்ப்பூரில் உள்ள புகழ்பெற்ற வித்யா பவன் பள்ளியின் [2] நிறுவனர்களில் இவரும் ஒருவராவார். இது பேடன் பவலின் சிறுவர் சாரணர் இயக்கத்தில் நிறுவப்பட்டதாகும். கல்வியில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 1976 ஆம் ஆண்டு இவருக்கு பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டது. [3]

2000 ஆம் ஆண்டு சனவரி மாதம் 5 ஆம் தேதியன்று சிறீமாலி தனது 90 ஆவது வயதில் இராசத்தான் மாநிலம் உதய்பூரில் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Members Bioprofile". பார்க்கப்பட்ட நாள் 2 February 2022.
  2. "Vidya Bhawan Journey". Vidya Bhawan. பார்க்கப்பட்ட நாள் 29 August 2022.
  3. "Kalu Lal Shrimali %7C People from Udaipur You Should Know About". Udaipur Blog. https://www.udaipurblog.com/kalu-lal-shrimali-people-from-udaipur-you-should-know-about.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே.எல்._சிறீமாலி&oldid=3797511" இலிருந்து மீள்விக்கப்பட்டது