கேளுணர்வியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேளுணர்வியல் (Audiology, இலத்தீன் audīre, "கேட்க") கேட்டல், சமநிலை, மற்றும் தொடர்புடைய குறைபாடுகளைக் குறித்த கல்வித் துறையாகும்.[1] இத்துறையில் பயிற்சி பெற்று கேட்டல் குறைபாடுகளுக்கு மருத்துவம் பார்ப்பவர்களும் இக்குறைபாடுகள் வருமுன்னரே தடுக்க முயல்பவர்களும் கேளுணர்வியலாளர்கள் எனப்படுகின்றனர். இத்துறைசார் கல்வியில் பல்வேறு சோதனைகளைப் பயன்படுத்தி (காட்டாக, கேட்புச் சோதனைகள், காதொலி உமிழ்வு அளவீடுகள், மின்உடலியச் சோதனைகள்), ஒருவரது கேட்புத் திறனை அளவிடுகின்றனர்; வழமையான வீச்சிலா, இல்லையெனில் எந்த பகுதிகளில் (உயர், நடு, அல்லது குறைந்த அதிர்வெண்) பாதிக்கப்பட்டுள்ளது, எந்தளவில் பாதிப்புள்ளது, குறைபாட்டை விளைவிக்கும் சிதைவு எங்குள்ளது - வெளிச்செவியிலா, நடுச்செவியிலா, உட்செவியிலா, செவிநரம்பிலா அல்லது மைய நரம்பு மண்டலத்திலா - எனத் தீர்மானிக்கின்றனர். கேளுணர்வியலாளர்கள் கேள்விக் குறைபாடு உள்ளவர்களுக்குதகுந்த பரிந்துரைகளை வழங்குகின்றனர்; செவிப்புலன் உதவிச்சாதனம் பொருத்தலாமா, உட்செவிச்சுருள் பதியம் தீர்வாகுமா என பரிந்துரை வழங்குகின்றனர். தவிர இவர்கள் போலிக்காதொலி நோயாளிகளுக்கும் உதவி புரிகின்றனர்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Gelfand, Stanley A. (2009). Essentials of Audiology (3 ). New York: Thieme Medical Publishers, Inc.. பக். ix. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-60406-044-7. https://books.google.com.au/books?id=SGdR8uCuRHUC. பார்த்த நாள்: 17 March 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேளுணர்வியல்&oldid=2748162" இலிருந்து மீள்விக்கப்பட்டது