உட்செவிச்சுருள் பதியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உட்செவிச்சுருள் பதியம்

உட்செவிச்சுருள் பதியம் என்பது முற்றிலும் செவிட்டுத் தன்மை உடைய ஒருவர் கேட்க உதவும் ஒரு இலத்திரனிய கருவி. இது அறுவைச் சிகிச்சை மூலம் காதினுள் பதிய வைக்கப்படுகிறது. இது ஒலியைப் பெருக்கித்தரும் கேள்விக்கருவி அன்று. மாறாக, இது உட்செவிச்சுருளுக்குள் இருக்கும் இன்னும் தொழிற்படக்கூடிய ஒலி நரம்பணுக்களை மின்புலத்தால் தூண்டிவிடுவதன் மூலம் கேட்க உதவுகின்றது.