கேயூ வரிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கேயூ வரிசை (Ku band) என்பது மின்காந்த அலைவரிசையில் (electromagnetic spectrum) உள்ள நுண்ணலைப் பிரிவாகும். கேயூ என்பது கே வரிசையின் கீழ் என்பதைக் குறிக்கிறது. (Ku-K under). இவை ரேடார் தொழில்நுட்பப் பிரிவில் உபயோகிக்கப்படுகிறது. இந்த அலைவரிசையின் அதிர்வெண் 12–18 GHz என மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளர்கள் கழகம் வரையறை செய்துள்ளது.[1][2] முக்கியமாக செயற்கைக்கோள் தகவல் தொடர்பிற்கும், நிலையான ஒளிபரப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஐரோப்பாவின் சில பகுதிகளில் வாகனங்களின் வேகத்தை அளக்கவும் இவை உபயோகப்படுத்தப்படுகின்றன.[3] ஆனால் இதை மழைக்காலங்களில் உபயோகப்படுத்தும் இடங்களில் இதன் அதிர்வெண் 10 GHz விட அதிகமாக இருக்கும் போது இந்த அலைவரிசையின் தரம் குறைகிறது (degradation).[4] இதில் கே என்பது ஜெர்மானிய மொழியில் கர்ஸ் (kurz) என்பதிலிருந்து பெறப்பட்டது. இதற்கு குட்டை அல்லது கட்டை(short) என்று பொருள்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. IEEE Std 521 - 2002 URL only available to IEEE members
  2. Note that in the band 11.2–12 GHz the working definitions of Ku band and X band overlap; satellite communications engineers would generally regard frequencies above 11.2 GHz as being part of the Ku band.
  3. Radar Detectors Glossary
  4. What is Ku band?
  5. http://www.itwissen.info/definition/lexikon/K-Band-K-band.html (german)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேயூ_வரிசை&oldid=2746210" இருந்து மீள்விக்கப்பட்டது