உள்ளடக்கத்துக்குச் செல்

கேயுபுண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேயுபுண்டு அல்லது குபுண்டு

கேயுபுண்டு 8.04 கேடியி 3.5 உடன்
விருத்தியாளர் கனோனிக்கல் நிறுவனம் and சமுக்க வினிநோகத்தர்கள்
இயங்குதளக்
குடும்பம்
லினக்ஸ்
மூலநிரல் வடிவம் திறந்த மூலம்
பிந்தைய நிலையான பதிப்பு 8.04 (ஹாடி ஹெரொன் Hardy Heron) / ஏப்ரல் 24, 2008
கருனி வகை Monolithic kernel
இயல்பிருப்பு இடைமுகம் கே டீ ஈ
அனுமதி குனூ பொதுமக்கள் உரிமம் (GNU GPL)
தற்போதைய நிலை தற்போதைய
வலைத்தளம் கேயுபுண்டு
உபுண்டு 12.04வில், குபுண்டுவை
நிறுவும் போது, நாம் தெரிவு செய்ய வேண்டிய
கேடிஇ திரைமேலாளர்கள்

கே மேசைத் தள பணிச்சூழலை அடிப்படையாகக் கொண்ட, கட்டற்ற இயக்குதளம், கேயுபுண்டு ஆகும். இது உபுண்டுவினை அடிப்படையாகக் கொண்டது. வருடத்திற்கு இரு முறை வெளியிடப்பட்டு, ஒவ்வொரு வெளியீட்டுக்கும் குறைந்தது பதினெட்டு மாதங்களுக்கு பாதுகாப்பு தொடர்பான மேம்பாட்டு பொதிகளை இலவசமாக வழங்குகின்றது. இதன் காரணமாக பயனர் ஒருவர் எதிர்பார்க்கக் கூடிய பாதுகாப்பான மற்றும் நிலையானதொரு கணினிப் பணிச்சூழலை தருகின்றது. இதன் சமூகம் சார்ந்த உருவாக்க முறையும் எவ்விடத்தும் கிடைக்கக் கூடிய தன்மையும் "அனைவருக்கும் மானுடம்" என்ற கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டது.

கேயுபுண்டுவின் சமூகம் இல்லையெனில் கேயுபுண்டுவே இல்லையெனச் சொல்லலாம். ஏனெனில் பன்முகத்தன்மை வாய்ந்த பயனர்களைக் கொண்ட இச்சமூகமே இதனை நிர்மாணித்து உருவாக்கி செயல்படுத்தவும் செய்கின்றது. தனி நபர்களும் குழுக்களும் இதற்கான நிரல்களையும் கலைப் பொருட்களையும் ஆவணங்களையும் தொழில்நுட்ப உதவியினையும் வழங்குவதோடு நில்லாது கேயுபுண்டுவினை பலதரப் பட்ட மக்களிடையே கொண்டு சேர்க்கவும் செய்கிறார்கள். இத்திட்டத்திற்கு பங்களிக்க விரும்பினால் கேயுபுண்டு பங்களிப்புகள் பரணிடப்பட்டது 2007-06-11 at the வந்தவழி இயந்திரம் பக்கத்தின் உதவியினை நாடவும்.

கேயுபுண்டு மற்றும் உபுண்டு திட்டங்களுக்கான ஆதரவினை வழங்கும் நிறுவனம் கனோனிகல் ஆகும். இந்நிறுவனம் குனு/ லினக்ஸ் மென்பொருட்களை விநியோகிப்பதில் உலகளவில் முன்னணி வகிக்கின்றது. உபுண்டு மற்றும் கேயுபுண்டுவிற்கான முழுமையான வர்த்தக ரீதியான ஆதரவினையும் கனோனிகல் நிறுவனம் நல்குகிறது.

கேயுபுண்டுவிற்கான உதவிகளைப் பெற்றிட

[தொகு]
   * கேமெனுவிலிருந்து -> உதவி யினை தேர்வு செய்வதன் மூலம் கேயுபுண்டுவிற்கான உதவிப் பக்கங்களை அடையலாம்.
   * உபுண்டு ஆவணமாக்கலுக்கான உத்தியோகப்பூர்வ இணையதளம்
   * சமூகம் சார்ந்த ஆவணமாக்கம்
   * மடலாடற் குழுக்கள்
   * உபுண்டு விவாதத் தளம் மற்று கேயுபுண்டு விவாதத் தளம்
   * நிகழ் இணைய உரையாடல் (IRC)
         o வழங்கி: chat.freenode.net
         o வாயில்: #kubuntu
   * உத்தியோகப் பூர்வ ஆதரவு
   * உபுண்டு தமிழ் குழுமம்

கேயுபுண்டுவில் தமிழ் வசதிகள்

[தொகு]

கேயுபுண்டுவினை நிறுவ ஒன்றன் பின் ஒன்றாகக் கீழ்காணும் பக்கங்களின் துணையினை நாடவும்...

http://ubuntuforums.org/showthread.php?t=408590
http://ubuntuforums.org/showthread.php?t=409311

கேயுபுண்டுவில் தமிழ் உள்ளீட்டு வசதிகள் கிடைக்கப் பெற...

http://ubuntuforums.org/showthread.php?t=409379

கேயுபுண்டு எட்ஜியினை அடிப்படையாகக் கொண்டு இவ்வாவணங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேயுபுண்டு&oldid=3582889" இலிருந்து மீள்விக்கப்பட்டது