கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா
வகைதரவுச் செயலாக்கம், தரவு பகுப்பாய்வு
தலைமையகம்லண்டன்
முக்கிய நபர்கள்அலெக்சாண்டர் நிக்ஸ் (CEO)[1]
ராபர்ட் மெர்சர் (முதலீட்டாளர்)[2]
ரெபெக்கா மெர்சர் (முதலீட்டாளர்)
ஸ்டீவ் பன்னோன் (துணைத் தலைவர், முன்னாள்)[3]
தாய் நிறுவனம்எஸ்சிஎல் குழுமம் லிமிடெட்[4]

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா (Cambridge Analytica) என்பது ஒரு பிரித்தானிய அரசியல் ஆலோசனை நிறுவனம் ஆகும், இது தரவுச் செயலாக்கம், தரவு தரகம் மற்றும் தரவு பகுப்பாய்வு ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.[5][6] இது 2013 இல் எஸ்சிஎல் குழுமத்தின் ஒரு கிளையாக தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் ராபர்ட் மெர்சரின் குடும்பத்தினருக்கு சொந்தமானது.[7] இதன் அலுவலகங்களை லண்டன், நியூயார்க், வாசிங்டன், டி. சி. ஆகியவற்றில் பராமரித்து வருகிறது.

இந்நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் வெற்றி - தோல்விகளை முடிவு செய்ய உதவும் பணியைச் செய்து வருகிறது. பெருந்தரவுகள், தரவுச் செயலாக்கம் போன்ற தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற இந்நிறுவனத்தால் உலகின் எந்த தகவலையும் எடுக்க முடியும் என்பது குறிப்பிடப்படுகிறது. அதற்காக உலகில் உள்ள 5 கோடிக்கும் அதிகமானோரின் முகநூல் தகவல்களை இந்நிறுவனம் திருடியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.[8] தேர்தல்களில் போலியான செய்திகளை பரப்புதல், எதிராக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாலியல் தொழிலாளிகளை அனுப்பி ‘ஸ்டிங் ஆபரேஷன்’ மூலம் அவர்களை சிக்க வைத்தல், கையூட்டு கொடுத்தல், சிக்க வைக்கும் வீடியோக்களை பதிவு செய்து அதை பரப்புதல் என பல நேர்மையற்ற வழிகளை இந்நிறுவனம் பின்பற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றிபெற இந்நிறுவனம் உதவியுள்ளது, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற நடந்த வாக்கெடுப்பிலும் இந்நிறுவனத்தின் தலையீடு, இந்தியாவிலும் கடந்த தேர்தல்களில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு உதவி செய்துள்ளது போன்றவை வெளிச்சத்துக்கு வந்துள்ளன.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. Cheshire, Tom (21-10-2016). "Behind the scenes at Donald Trump's UK digital war room". Sky News. Check date values in: |date= (உதவி)
  2. Cadwalladr, Carole (18 மார்ச் 2018). "'I made Steve Bannon's psychological warfare tool': meet the data war whistleblower". The Guardian. 18-03-2018 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  3. Illing, Sean (16-10-2017). "Cambridge Analytica, the shady data firm that might be a key Trump-Russia link, explained". Vox. 24 மார்ச் 2018 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
  4. "Cambridge Analytica LLC: Private Company Information". Bloomberg. 20-03-2018 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  5. Editorial, Reuters (20 மார்ச் 2018). "Factbox: Who is Cambridge Analytica and what did it do?". 23 Mar 2018 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Exposed: Undercover secrets of Trump's data firm". 20 மார்ச் 2018. 22-03-2018 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  7. Sasha Issenberg (12-11-2015). "Cruz-Connected Data Miner Aims to Get Inside U.S. Voters' Heads". Bloomberg. https://www.bloomberg.com/politics/features/2015-11-12/is-the-republican-party-s-killer-data-app-for-real-. பார்த்த நாள்: 2 பிப்ரவரி 2016. 
  8. "ஃபேஸ்புக்கிலிருந்து ஐந்து கோடி மக்களின் தகவல்கள் திருட்டு: அத்துமீறிய அனலிட்டிகா". செய்தி. தி இந்து தமிழ். 21 மார்ச் 2018. 3 ஏப்ரல் 2018 அன்று பார்க்கப்பட்டது.
  9. எம்.சண்முகம் (23 மார்ச் 2018). "'கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா'- தில்லுமுல்லு.. தில்லுமுல்லு". கட்டுரை. தி இந்து தமிழ். 3 ஏப்ரல் 2018 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]