கேத்தி கேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேத்தி கேனன்
பிறப்பு1954 (அகவை 69–70)
திம்மின்ஸ், ஒன்றாரியோ
தேசியம்கனடாவைச் சேர்ந்தவர்
பணிபத்திரிக்கையாளர்
அறியப்படுவதுஆப்கானித்தானில் காயமடைந்த நிலையில் இருந்து மீண்டு, போர் அறிக்கையிடலுக்குத் திரும்பியவர்

கேத்தி எம். கேனன் ( Kathy M. Gannon ) ஒரு கனடிய பத்திரிகையாளரும், ஆப்கானித்தான் மற்றும் பாக்கித்தானுக்கான அசோசியேட்டட் பிரெசின் செய்தி இயக்குனரும் ஆவார்.[1] இவர் ஆப்கானித்தானில் இருந்து அறிக்கை செய்யும் போது தாக்கப்பட்டு காயமடைந்தார்.[2][3][4] இவரது ஜெர்மன் சக ஊழியர் அஞ்சா நீட்ரிங்காஸ் படுகாயமடைந்து இறந்து போனார். கேனன் தனது காயங்களிலிருந்து மீண்டார். இப்போது ஆர்வர்டு கெனடி பள்ளியில் ஊடக மையத்தின் மூத்த சகாவாக உள்ளார்.

சுயசரிதை[தொகு]

கேனன் ஒன்றாரியோவிலுள்ள திம்மின்சில் பிறந்தார். 1988 ஆம் ஆண்டு முதல் ஆப்கானித்தான் மற்றும் பாக்கித்தான் பற்றி அறிக்கை செய்தார்.[1] 2002 ஆம் ஆண்டில், சர்வதேச பெண்கள் ஊடக அறக்கட்டளை இவருக்கு தைரியமான பத்திரிகையாளருக்கன விருதை வழங்கியது.[5] 2003 ஆம் ஆண்டில், வெளிநாட்டு உறவுகளுக்கான அமைப்பிலிருந்து இவருக்கு ஒரு வருட எட்வர்ட் ஆர். முரோ பிரஸ் உதவித் தொகை வழங்கப்பட்டது.[6]

கேனன் தன் மீதான தாக்குதலுக்கு முன்னர் ஆப்கானித்தானில் இருந்து 18 ஆண்டுகள் அறிக்கை செய்தார். மேலும் அசோசியேட்டட் பிரஸ்ஸின் பிராந்திய தலைவராகவும் இருந்தார்.[2]

தாக்குதல்[தொகு]

ஆப்கானிய தேசிய இராணுவம் மற்றும் காவல்துறையின் கூறுபாடுகளால் பாதுகாக்கப்பட்ட தேசியத் தேர்தல்களைப் பற்றி அறிக்கையிடும் செய்தியாளர்களின் தொடரணியில் கேனனும் நீட்ரிங்ஹாஸும் இருந்தனர்.[2] வாகனங்கள் நிறுத்தப்பட்டதும், காவலர்களில் ஒருவரான நகிபுல்லா என்பவர், தனது துப்பாக்கியை எடுத்து, "அல்லாஹு அக்பர்" என்று கூறிக்கொண்டே, இவர்களின் வாகனத்தை மிக அருகில் இருந்து சுட்டார்.[7] தாக்குதலில் இவர் பலத்த காயமடைந்தார். பின் அமர்ந்து சக ஊழியர்களிடம் சரண் அடைந்தார்.

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Maks, Patrick (2020-12-22). "Kathy Gannon named news director for Afghanistan and Pakistan". AP Definitive Source. பார்க்கப்பட்ட நாள் 2020-12-24.
  2. 2.0 2.1 2.2 "Kathy Gannon, Canadian-born journalist, wounded in Afghanistan, colleague, photographer Anja Niedringhaus, killed". National Post. The Canadian Press. 2014-04-04. https://nationalpost.com/news/kathy-gannon-canadian-born-journalist-wounded-in-afghanistan-colleague-photographer-anja-niedringhaus-killed. "Afghan President ஹமித் கர்சாய் expressed his deep sadness over Niedringhaus' death and the wounding of Gannon. "These two AP journalists had gone to Khost province to prepare reports about the presidential and provincial council elections," a statement from Karzai's office quoted him as saying. It added that Karzai instructed the interior minister and the Khost governor to assist the AP in every way possible." 
  3. Gaeml, Kim (2014-04-04). "AP Photographer Anja Niedringhaus Killed, Reporter Kathy Gannon Shot In Afghanistan". The Huffington Post. Associated Press இம் மூலத்தில் இருந்து 2014-10-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141030043049/http://www.huffingtonpost.com/2014/04/04/ap-photographer-anja-niedringhaus-killed-kathy-gannon-shot_n_5089336.html. "Gannon, 60, who for many years was the news organization's Afghanistan bureau chief and currently is a special correspondent for the region, was shot three times in the wrists and shoulder. After surgery, she was in stable condition and spoke to medical personnel before being flown to Kabul." 
  4. Edwards, Michael (2014-04-04). "Two female foreign journalists shot in Afghanistan, one dead". ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இம் மூலத்தில் இருந்து 2014-04-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140405073320/http://www.abc.net.au/news/2014-04-04/female-foreign-journalists-shot-in-afghanistan-election/5368674. ""Anja Niedringhaus and Cathy Gannon were the two journalists in the world who spent more time than any others covering Afghanistan," Associated Press executive director Kathleen Carroll said." 
  5. "Kathy Gannon | 2002 Courage in Journalism Award". iwmf.org. சர்வதேச பெண்கள் ஊடக அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2021-09-20.
  6. Annual Report, July 1, 2002 – June 30, 2003 (PDF) (Report). Council on Foreign Relations. 2003. p. 110. பார்க்கப்பட்ட நாள் 2021-09-20.
  7. Cade, DL (2014-04-04). "Veteran AP Photographer Killed by Afghan Policeman Who Opened Fire on Her Vehicle". PetaPixel. Archived from the original on 2014-04-07. பார்க்கப்பட்ட நாள் 2014-12-11. According to the AP report, Niedringhaus, 48, was in a car with AP reporter Kathy Gannon, an AP Television News freelancer and a driver. They had just arrived at a heavily guarded district compound and were waiting for the convoy to move forward when a unit commander by the name of Naqibullah "walked up to the car, yelled 'Allahu Akbar' — God is Great — and opened fire on them in the back seat with his ஏகே-47."
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேத்தி_கேனன்&oldid=3859421" இலிருந்து மீள்விக்கப்பட்டது