கேத்தரின், கேம்பிரிட்ச் சீமாட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கேத்தரின்
Catherine
கேம்பிரிட்ஜ் சீமாட்டி

2014 இல் கேம்பிரிட்ஜ் சீமாட்டி
வாழ்க்கைத் துணை இளவரசர் வில்லியம், கேம்பிரிட்ச் கோமகன்
(29 ஏப்ரல் 2011)
வாரிசு
ஜோர்ஜ்
சார்லட்
முழுப்பெயர்
கேத்தரின் எலிசபெத்
குடும்பம் வின்சர் அரண்மனை (திருமணத்திற்குப் பின்னர்)
தந்தை மைக்கேல் மிடில்ட்டன்
தாய் கரோல் கோல்ட்சிமித்
சமயம் இங்கிலாந்து திருச்சபை[1]

கேத்தரின், கேம்பிரிட்ஜ் சீமாட்டி (Catherine, Duchess of Cambridge), கேத்தரின் எலிசபெத் "கேட்" மிடில்டன் (Catherine Elizabeth "Kate", பிறப்பு; 9 சனவரி 1982),[2] கேம்பிரிட்ச் கோமகன் இளவரசர் வில்லியமின் மனைவி ஆவார். அவர்களது திருமணம் 2011 ஏப்ரல் 29 அன்று வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் நடைபெற்றது.

2013 சூலை 22 இல், கேத்தரின் ஆண் குழந்தை ஒன்றுக்குத் தாயானார். இந்த முதலாவது குழந்தை கேம்பிரிட்சின் இளவரசர் ஜார்ஜ் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்க்குப் பின்னர் ஆட்சிக்கு வரக்கூடிய மூன்றாவது முடிக்குரிய இளவரசர் ஆவார்.[3][4] 2015 மே 2 இல், சார்லட் என்ற இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்தார். சார்லட் ஐக்கிய இராச்சியத்திற்கு நான்காவது முடிக்குரியவர் ஆவார்.[5]

மிடில்டன் பெர்க்சையரில் வளர்ந்தவர். மார்ல்பரோ கல்லூரியில் பயின்று பின்னர் புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகத்திற்கு மேல்படிப்புக்குச் சென்றார். அங்குதான் 2001ஆம் ஆண்டு வேல்சு இளவரசர் வில்லியமைச் சந்தித்தார். ஒருவரையொருவர் விரும்பிய நேரத்தில் தன்னை ஊடகங்கள் பின்தொடர்ந்து தொல்லைப்படுத்துவதாக புகார் கூறினார். ஏப்ரல் 2007ஆம் ஆண்டில் ஊடகங்கள் இருவருக்குமிடையே பிளவு ஏற்பட்டு பிரிவதாக அறிவித்தன. நண்பர்களாக தங்கள் உறவைத் தொடர்ந்த இருவரும் 2007ஆம் ஆண்டிலேயே மீண்டும் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து மிடில்டன் பல அரசாங்க நிகழ்வுகளில் பங்கெடுத்துள்ளார். அவருடைய புதுப்பாங்கு உணர்வுகளுக்காக பாராட்டப்பட்டு பல "சிறப்பாக ஆடை அணிந்தவர்கள்" பட்டியல்களில் இடம் பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Adams, William Lee (14 ஏப்ரல் 2011). "Kate Middleton's Secret Confirmation: How Religious Is the Future Princess?". டைம். http://newsfeed.time.com/2011/04/14/kate-middletons-secret-confirmation-how-religious-is-the-future-princess/. பார்த்த நாள்: 20 பெப்ரவரி 2013. 
  2. "Catherine, Duchess of Cambridge". Current Biography Yearbook 2011. Ipswich, MA: H.W. Wilson. 2011. பக். 116–118. ISBN 978-0-8242-1121-9. 
  3. Saul, Heather (22 சூலை 2013). "Royal baby: Duchess of Cambridge goes into labour". The Independent. http://www.independent.co.uk/news/uk/home-news/royal-baby-duchess-of-cambridge-goes-into-labour-8725599.html. பார்த்த நாள்: 22 சூலை 2013. 
  4. "Royal baby: Kate gives birth to boy". BBC (22 சூலை 2012). பார்த்த நாள் 22 சூலை 2013.
  5. "Royal baby: Duchess of Cambridge gives birth to daughter". BBC News (2 மே 2015). பார்த்த நாள் 2 மே 2015.

வெளியிணைப்புகள்[தொகு]