கேசவராம் காசிராம் சாஸ்திரி
கேசவராம் காசிராம் சாஸ்திரி | |
---|---|
பிறப்பு | 28 சூலை 1905 மங்குரோல், ஜூனாகத் மாவட்டம், குஜராத், இந்தியா |
இறப்பு | 9 செப்டம்பர் 2006 (வயது 101) அகமதாபாத், குஜராத், இந்தியா |
மற்ற பெயர்கள் | કેકા શાસ્ત્રી, કાઠિયાવાડી વિદૂર |
அமைப்பு(கள்) | விசுவ இந்து பரிசத் |
கையொப்பம் |
கேசவராம் காசிராம் சாஸ்திரி (Keshavram Kashiram Bambhaniya), 1964ல் நிறுவப்பட்ட விசுவ இந்து பரிசத் நிறுவனத் தலைவர்களில் ஒருவரும், குஜராத் மாநில விஷ்வ இந்து பரிசத்தின் தலைவரும் ஆவார்.[1][2]
வாழ்க்கை
[தொகு]கே. கே. சாஸ்திரி 1925 முதல் ஜுனாகத் மாவட்டத்தின் பள்ளியில் சமசுகிருத ஆசிரியராக பணியில் சேர்ந்தார். பின்னர் 1936ல் பிரஜா பந்த் எனும் குஜராத் வார இதழின் உதவி ஆசிரியராக அமர்ந்தார். 1958ல் எல் டி. கற்றல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தார். பல்லவி தேவி மகளிர் கல்லூரியில் சமசுகிருதப் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். 1961 குஜராத் ஆய்வு நிறுவனத்தில் கௌரவ ஆலோசகராகவும் பணியாற்றினார். இவர் பாரதிய சன்ஸ்கார் தாம் நிறுவனத்தின் குலபதி என அழைக்கப்பட்டார்.[3]இவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டியாக இருந்தவர்.[4]
சாதனைகள்
[தொகு]கே. கே. சாஸ்திரி 19க்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்களுக்கும் மற்றும் 1500க்கும் மேற்பட்ட குஜராத்தி இலக்கிய மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். இவரை குஜராத்தி இலக்கணத்தின் நடமாடும் அகராதி என்றும் வேத இலக்கிய அறிஞர் என்றும் புகழப்பட்டார். இவர் 240 நூல்களை எழுதியுள்ளார்.
முக்கியப் படைப்புகள்
[தொகு]இவர் குஜராத்தி, இந்தி மற்றும் சமசுகிருத மொழிகளில் இயற்றிய முக்கிய நூல்கள்:
- பிருகத் குஜராத்தி அகராதி (பகுதி I&II)
- மூலிகை மருத்துவ அகராதி (Vanaushadhi Kosh)
- ஜெய்சம்ஹிதா (Jaisamhita (8800 episode book on Mahabharat)
- பாரத்சம்ஹிதா
- சிறீமத்பாகவத புராணம் (சமசுகிருதம்).
- குஜராத்தி சொல்லாராய்ச்சி
- வாக் வைபவம்
- கவி ரசீத் (பாகம் 1 & 2)
- அக்சர் அனக சப்தம் (குஜராத்தி விளக்க உரை)
- நரசிங் மேத்தா - ஒரு அத்தியாயனம் Apbhransh vyakaran
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "28 जुलाई / जन्म-दिवस; विश्व हिन्दू परिषद और केशवराम शास्त्री". Archived from the original on 2014-08-21. பார்க்கப்பட்ட நாள் 2014-08-20.
- ↑ "Obituary: Renowned scholar and senior VHP leader K. K. Shastri is no more". Organiser. 24 Sep 2006 இம் மூலத்தில் இருந்து 5 January 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140105002954/http://organiser.org/archives/historic/dynamic/modulesf196.html?name=Content&pa=showpage&pid=149&page=8.
- ↑ "Keshavram Kashiram Shastri: Life devoted to religion". Panchajanya. 19 Sep 2004. Archived from the original on 24 October 2012. பார்க்கப்பட்ட நாள் 21 Aug 2014.
- ↑ "Modi's mentors: KK Shastri, the scholar who helped save the Gujarati language - Firstpost". Firstpost. 13 March 2014. பார்க்கப்பட்ட நாள் 18 March 2016.