உள்ளடக்கத்துக்குச் செல்

கெவின் ஓவன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கெவின் யானிக் சிடீன் (Kevin Yanick Steen) (பிறப்பு 7, மே, 1984) என்பவர் ஓர் கனேடிய மல்யுத்த வீரர். அவர் டபிள்யு டபிள்யு ஈ உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தில் சிமாக்டவுன் என்ற நிகழ்ச்சியில் கெவின் ஓவன்சு என்ற புனை பெயரில் பங்கேற்கிறார். மேலும் இவர் நடப்பு அமெரிக்க வாகையர், இது இவரது இரண்டாம் முறை.

ஓவன்சு இதற்கு முன்னதாக உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் - வளரும் நிறுவனமான என் எக்சு டீ-யில்  ஒரு தடவை என் எக்சு டீ வாகையராக,[1] பிரதான நிறுவனத்திற்கு மே 2015 அறிமுகமாவதற்கு முன் இருந்தார். இவர் இண்டர்காண்டினண்டல் மற்றும் அமெரிக்க சாம்பியனாக இரு முறையும், உலக சாம்பியனாக ஒரு முறையும் ( அதிகப்படியான நாட்கள் சாம்பியனாக இருந்தவர், 189 நாட்கள்)[2]

இவர் சர்வதேச மல்யுத்த சிண்டிகேட் நிறுவனத்தில் மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்றார். அதில் அவர் மூன்று முறை சிண்டிகேட் உலக மிகுகன வாகையாளர் பட்டத்தினைப்பெற்றார். அதன்பின் அனைத்து அமெரிக்க மல்யுத்த தொடரில் பங்கேற்றார். அங்கு அவர் அமெரிக்க மிகுகன வாகையாளர் பட்டத்தினைப் பெற்றார். காம்பாட் சோன் மல்யுத்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அங்கு அவர் CZW அயர்ன் மேன் வாகையாளர் பட்டத்தினை வென்றார்.[3] அவர் உலகமற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் அங்கத்துவ நிறுவனமான என் எக்ஸ் டியில் கெவின் ஓவன்ஸ் பெயரில் மல்யுத்தம் செய்த பின் பரவலாக அறியப்பட்டார், அங்கு அவர் ஒரு முறை என் எக்ஸ் டி வாகையாளர் பட்டத்தினை வென்றார்.,[4] மே 2015 இல் முக்கிய பட்டியலில் அறிமுகமாகிய பின் ஒரு முறை யுனிவர்சல் வாகையாளர் பட்டத்தினையும், இரண்டு முறை இன்டர் கண்டங்களுக்கு இடையிலான வாகையாளர் பட்டத்தினையும், யுனைடெட் ஸ்டேட்ஸ் வாகையாளர் பட்டத்தினையும் மூன்று முறை வென்றுள்ளார்.[5][6]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

ஸ்டீன் மே 7, 1984,[7][8] கியூபெக்கிலுள்ள செயிண்ட்-ஜீன்-சுர்-ரிச்சலீயுவில் பிறந்தார்,[9] கியூபெக்கின் மேரிவில்லில் வளர்ந்தார். அவருக்கு எட்வர்ட் என்ற சகோதரர் உள்ளார். அவர் பிரெஞ்சு-கனடிய வம்சாவளியைச் சேர்ந்தவர், பிரெஞ்சு மொழி இவரின் தாய்மொழி ஆகும்.[10] தனது இளமைக் காலத்தில் ஐஸ் ஹாக்கி, கால்பந்து மற்றும் பேஸ்பால் ஆகியவற்றில் ஸ்டீன் பங்கேற்றார். ஒரு கால்பந்து விளையாட்டின் போது காயம் ஏற்பட்டதனால் அதன் பிறகு அதில் இவர் கவனம் செலுத்தவில்லை. ரெசில்மேனியா பதினொன்றாம் பருவத்தில் டீசல் மற்றும் ஷான் மைக்கேல்ஸுக்கும் இடையிலான போட்டி ஒன்றினைக் கண்ட பிறகு தான் ஒரு தொழிற்முறை மல்யுத்த வீரராக மாற வேண்டும் என நினைத்தார் [7][11]

தொழில்முறை மல்யுத்த வாழ்க்கை

[தொகு]

ஆரம்பகால வாழ்க்கை (2000-2004)

[தொகு]

கெவின் ஓவன்சு 14 வயதாக இருந்தபோது, கியூபெக்கை தளமாகக் கொண்ட மல்யுத்த வீரரான செர்ஜ் ஜோடோயின் தலைமையில் பயிற்சியைத் தொடங்க அவரது பெற்றோர் அனுமதித்தனர்.[7] அடுத்த ஆண்டு, ஸ்டீன் ஜாக்ஸ் ரூஜோ என்பவரிடம்பயிற்சியைத் தொடங்கினார்.[7] பிறகு ,அவர் தனது பிரதான பயிற்சியாளர் என்று அழைத்த டெர்ரி டெய்லருடன் பயிற்சி பெற்றார்.[12] ஸ்டீபன் தனது முதல் போட்டியை மே 7, 2000 அன்று (அவரது 16 வது பிறந்த நாள்) கியூபெக்கிலுள்ள எல் அசோம்ப்சனில் கல்ந்துகொண்டார்.[7]

சர்வதேச மல்யுத்த சிண்டிகேட் (2003-2009)

[தொகு]

ஆகஸ்ட் 16, 2003 அன்று, பார்ன் டு ப்ளீட்டில் நிகழ்வில் ஸ்டீன் தனது சர்வதேச மல்யுத்த சிண்டிகேட் மல்யுத்தப் போட்டியில் அறிமுகமானார். அக்டோபர் 18, 2003 நடைபெற்ற போட்டியில் இவர் எல் ஜெனரிகோவினைத் தோற்கடித்தார் . நவம்பர் 15, 2003 அன்று நடந்த் ஒற்றையர் போட்டியில் ஸ்டீனை அவர் தோற்கடித்தார்.[13][14]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "NXT Championship". உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம். பார்க்கப்பட்ட நாள் February 24, 2017.
  2. "Universal Championship". உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம். பார்க்கப்பட்ட நாள் February 24, 2017.
  3. "Cagematch title listing". Archived from the original on November 21, 2011. பார்க்கப்பட்ட நாள் August 30, 2009.
  4. "NXT Championship". உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம். Archived from the original on April 9, 2017. பார்க்கப்பட்ட நாள் February 24, 2017.
  5. "Intercontinental Championship". உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம். Archived from the original on November 16, 2018. பார்க்கப்பட்ட நாள் February 24, 2017.
  6. "United States Championship". உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம். Archived from the original on January 13, 2016. பார்க்கப்பட்ட நாள் April 4, 2017.
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 LeRoux, Yves (February 26, 2005). "Steen believes in goals, not dreams; Montreal grappler expanding his horizons". Slam! Sports. Canadian Online Explorer. Archived from the original on July 22, 2015. பார்க்கப்பட்ட நாள் October 23, 2010.
  8. "Kevin Owens WWE Profile Page". ESPN. Archived from the original on March 29, 2019. பார்க்கப்பட்ட நாள் March 29, 2019.
  9. "Biography". KillSteenKill (official website). Archived from the original on October 26, 2012. பார்க்கப்பட்ட நாள் May 14, 2012.
  10. "Leaders of the new school". WWE.com. September 18, 2014. Archived from the original on August 4, 2015. பார்க்கப்பட்ட நாள் August 26, 2015.
  11. "Biography". Archived from the original on July 16, 2011.
  12. Herzog, Kenny (May 18, 2015). "Who Is Kevin Owens? The Guy Who Gatecrashed 'Raw' Speaks". Rolling Stone. Archived from the original on May 20, 2015. பார்க்கப்பட்ட நாள் May 19, 2015.
  13. "Kevin Owens Matches" பரணிடப்பட்டது செப்டெம்பர் 15, 2016 at the வந்தவழி இயந்திரம், CAGEMATCH, Retrieved on August 31, 2016.
  14. "IWS Payback's A Bitch Results Press Release" பரணிடப்பட்டது அக்டோபர் 11, 2016 at the வந்தவழி இயந்திரம், Internet Wrestling Syndicate, Retrieved on August 31, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெவின்_ஓவன்சு&oldid=3313593" இலிருந்து மீள்விக்கப்பட்டது