முஸ்தாபா கெமால் அத்தாதுர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கெமால் அடாடுர்க் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முஸ்தாபா கெமால் அத்தாதுர்க்
1st துருக்கியின் குடியரசுத் தலைவர்
பதவியில்
29 அக்டோபர் 1923 – 10 நவம்பர் 1938
பின்வந்தவர் இஸ்மெத் இனோனு
1st துருக்கியின் முதன்மை அமைச்சர்
பதவியில்
3 மே 1920 – 24 ஜனவரி 1921
பின்வந்தவர் ஃபெவ்சி சாக்மக்
1st பராளுமன்ற அவைத்தலைவர்
பதவியில்
24 ஏப்ரல் 1920 – 29 அக்டோபர் 1923
பின்வந்தவர் அலி ஃபேத்தி ஒக்யார்
1st குடியரசு மக்கள் கட்சித் தலைவர்
பதவியில்
1919–1938
பின்வந்தவர் இஸ்மெத் இனோனு
தனிநபர் தகவல்
பிறப்பு மே 19, 1881(1881-05-19)
செலானிக் (தெசாலோனிக்கி)
இறப்பு 10 நவம்பர் 1938(1938-11-10) (அகவை 57)
தோல்மாபாசே மாளிகை, இஸ்தான்புல்
தேசியம் துருக்கியர்
அரசியல் கட்சி குடியரசு மக்கள் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) லத்தீபா உசாக்லிகில் (1923–25)
சமயம் [இறைமறுப்பு]
கையொப்பம்

முஸ்தாபா கெமால் அத்தாதுர்க் (Mustafa Kemal Atatürk - 19 மே 1881 – 10 நவம்பர் 1938) ஒரு துருக்கிய படை அலுவலரும், புரட்சிகர அரசியலாளரும், துருக்கிக் குடியரசின் நிறுவனரும் அதன் முதல் குடியரசுத் தலைவரும் ஆவார். கலிப்பொலி சண்டையின் போது பிரிவுக் கட்டளை அலுவலராகப் பணியாற்றிய காலத்தில் இவர் தன்னை ஒரு புத்திக் கூர்மையுள்ள மிகத் திறமையான படை அலுவலராக நிலைநிறுத்திக் கொண்டார். இவர் பின்னர் முதலாம் உலகப் போரில் கிழக்கு அனத்தோலியப் போர் முனையிலும், பாலஸ்தீனியப் போர் முனைப் பகுதியிலும் திறமையாகச் செயல் பட்டார். ஓட்டோமன் பேரரசு கூட்டணிப் படைகளிடம் தோல்வியடைந்ததையும் அதன் பிரிவினைக்கான திட்டங்களையும் தொடர்ந்து இவர் துருக்கியின் விடுதலைப் போராக மாறிய துருக்கிய தேசிய இயக்கத்தைத் தொடங்கி வழிநடத்தினார். அங்காராவில் ஒரு இடைக்கால அரசை அமைத்த இவர் நட்பு நாடுகளால் அனுப்பப்பட்ட படைகளைத் தோற்கடித்தார். இவரது வெற்றிகரமான படை நடவடிக்கைகள் நாடு விடுதலை பெறுவதற்கும் துருக்கிக் குடியரசு உருவாவதற்கும் வழி வகுத்தது.

நாட்டின் முதல் தலைவராக இவர் பெரிய அளவில் அரசியல், பொருளாதார, பண்பாட்டுச் சீர்திருத்தத் திட்டங்களை நடைமுறைப் படுத்தினார். அறிவொளி இயக்கத்தின் ஆர்வலராக விளங்கிய இவர் ஓட்டோமான் பேரரசின் அழிபாடுகளிலிருந்து, நவீன மக்களாட்சி, மதச் சார்பற்ற, நாட்டின அரசு ஒன்றை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார். அத்தாதுர்க்கின் சீர்திருத்தங்கள் குறித்த கொள்கைகள் கெமாலியம் என அழைக்கப்பட்டதுடன், இதுவே தற்காலத் துருக்கியின் அரசியல் அடிப்படையாகவும் விளங்குகிறது.