துப்ருக்
Jump to navigation
Jump to search
துப்ருக் (டொப்ருக், Tobruk, அரபி:طبرق) லிபியாவிலுள்ள ஒரு துறைமுக நகரம். நடுநிலக்கடல் கரையோரமாக அல் புட்னான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் மக்கள்தொகை 3,00,000. பண்டைய கிரேக்கர்களின் காலத்தில் அவர்கள் வாழ்ந்த காலனி ஒன்றும், உரோமப் பேரரசின் காலத்தில் ஒரு கோட்டை ஒன்றும் இங்கு இருந்துள்ளன. இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலியால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்நகரம் டோப்ருக் முற்றுகையில் பெருத்த சேதமடைந்தது. போருக்குப் பின் மீண்டும் சீரமைக்கப்பட்டு இப்போது லிபியாவின் எண்ணெய் ஏற்றுமதி துறைமுகங்களுள் ஒன்றாக விளங்குகிறது.
வெளி இணைப்புகள்[தொகு]
பொதுவகத்தில் டோப்ருக் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.