உள்ளடக்கத்துக்குச் செல்

கெமாலியோனினே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெமாலியோனினே
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கிளாவெர் & போமி, 1986

கெமாலியோனினே (Chamaeleoninae) என்பது பச்சோந்திகளின் பெயரளவிலான துணைக்குடும்பம் ஆகும். 1986ஆம் ஆண்டில் கிளேவர் மற்றும் போகோம் ஆகியோரால் கெமாலியோனிடே குடும்பம் புரூக்சினே மற்றும் சாமேலியோனே என்ற இரண்டு துணை குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டது.[1] இருப்பினும், 1986-இல் இதன் தோற்றத்திலிருந்து, இந்த துணைக்குடும்பப் பெயரின் செல்லுபடியாகும் தன்மை மிகவும் விவாதத்திற்குரியதாக உள்ளது. பெரும்பாலான தொகுதி வரலாற்று ஆய்வுகள் புரூக்சினே என்ற துணைக்குடும்பத்தின் குள்ளப் பச்சோந்திகள் ஓர் ஒற்றைத்தொகுதிமரபௌ உயிரினத் தோற்றம் கொண்ட குழு அல்ல என்ற கருத்தை ஆதரிக்கின்றன.[2][3][4][5] சில வகைப்பாட்டியலாளர்கள் முன்பு ஆதாரம் இல்லாததின் அடிப்படையில் துணை குடும்ப வகைப்பாட்டைப் பயன்படுத்த விரும்பினாலும், இவர்கள் பின்னர் இந்த துணை குடும்பப் பிரிவைக் கைவிட்டனர். இனி கெமாலியோனிடே குடும்பத்துடன் எந்த துணை குடும்பங்களையும் அங்கீகரிக்கவில்லை. எவ்வாறாயினும், 2015ஆம் ஆண்டில், குளோ புரூக்சீனியா மற்றும் பாலியோன் பேரினங்களை மட்டுமே புரூக்சினே துணைக்குடும்பத்திற்குள் வைப்பதன் மூலம் துணை குடும்பப் பிரிவை மறுசீரமைத்தார். மற்ற அனைத்து சிற்றினங்கள் கெமாலியோனினேவில் வைக்கப்பட்டன.[6]

வகைப்பாடு

[தொகு]

துணைக் குடும்பத்தில் முன்னர் அங்கீகரிக்கப்பட்ட பத்து பேரினங்கள்:

  • பேரினம் ஆர்க்காயசு
  • பேரினம் பிராடிபோடியன்
  • பேரினம் காலும்மா
  • பேரினம் சாமேலியோ
  • பேரினம் பர்சிபர்
  • பேரினம் கின்யோன்ஜியா
  • பேரினம் நட்சிகாம்பியா
  • பேரினம் இரைபெலியான்
  • பேரினம் இராம்போலியான்
  • பேரினம் திரையோசெரசு

தில்பரி & தோல்லே (2009) இதை முழு பேரினமாக உயர்த்தும் வரை, திரோசெரோசு முன்பு கெமாலியோ துணை இனமாகக் கருதப்பட்டது.   அப்போதிருந்து, இரண்டு புதிய சிற்றினங்கள் திரையோசெரோசு பேரினத்தில் கிரோசு மற்றும் போமி (2010), சிடிபாலா மற்றும் பலரால் (2011) விவரிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு புதிய சிற்றினங்களும் கெமாலியோ என்ற பொதுவான பெயருடன் இணைந்து வெளியிடப்படவில்லை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Phylogeny and classification of the Chamaeleonidae (Sauria) with special reference to hemipenis morphology". Bonner Zoologische Monographien 22: 1–64. 1986. 
  2. "Molecular phylogenetics and mitochondrial genomic evolution in the Chamaeleonidae (Reptilia, Squamata)". Molecular Phylogenetics and Evolution 23 (1): 22–36. 2002. doi:10.1006/mpev.2001.1076. பப்மெட்:12182400. 
  3. "Chameleon radiation by oceanic dispersal". Nature 415 (6873): 784–787. 2002. doi:10.1038/415784a. பப்மெட்:11845207. Bibcode: 2002Natur.415..784R. https://deepblue.lib.umich.edu/bitstream/2027.42/62614/1/415784a.pdf. 
  4. "Eastward from Africa: Palaeocurrent-mediated chameleon dispersal to the Seychelles islands". Biological Letters 7 (2): 225–228. 2011. doi:10.1098/rsbl.2010.0701. பப்மெட்:20826471. 
  5. "Large-scale phylogeny of chameleons suggests African origins and Eocene diversification". Proceedings of the Royal Society B 280 (1759): 20130184. 2013. doi:10.1098/rspb.2013.0184. பப்மெட்:23536596. 
  6. Glaw, F. (2015). "Taxonomic checklist of chameleons (Squamata: Chamaeleonidae)". Vertebrate Zoology 65 (2): 167–246. 

மேலும் காண்க

[தொகு]
  •  ,   2010. A new chameleon of the Trioceros bitaeniatus complex from Mt. Hanang, Tanzania, East Africa (Squamata: Chamaeleonidae). Bonn zoological Bulletin 57 (1): 19–29.   PDF
  •   et al. 2011. A new species of chameleon (Sauria: Chamaeleonidae) from the highlands of northwest Kenya. Zootaxa, 3002: 1–16. Preview
  •  ,   2009. A re-appraisal of the systematics of the African genus Chamaeleo (Reptilia: Chamaeleonidae). Zootaxa, 2079: 57–68. Abstract & excerpt

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
  •  
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெமாலியோனினே&oldid=3921600" இலிருந்து மீள்விக்கப்பட்டது