கென்னத் கவுண்டா
கென்னத் கவுண்டா | |
---|---|
![]() | |
முதலாவது சாம்பிய அரசுத் தலைவர் | |
பதவியில் 24 அக்டோபர் 1964 – 2 நவம்பர் 1991 | |
முன்னவர் | பிரித்தானிய குடியேற்றவாத ஆளுநர் |
பின்வந்தவர் | பிரெடெரிக் சிலுபா |
3rd கூட்டுசேரா இயக்கத்தின் தலைமைச் செயலாளர் | |
பதவியில் 8 செப்டம்பர் 1970 – 5 செப்டம்பர் 1973 | |
முன்னவர் | ஜமால் அப்துல் நாசிர் |
பின்வந்தவர் | ஹோரி பௌமெடியன் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 28 ஏப்ரல் 1924 சின்சாலி, வடக்கு ரொடீசியா |
தேசியம் | சாம்பியர் |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசிய விடுதலைக் கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | பெட்டி கவுண்டா |
பிள்ளைகள் | 8 |
தொழில் | ஆசிரியர் |
சமயம் | பிரெசுபைடெரியத் திருச்சபை |
கென்னத் டேவிட் கவுண்டா ( Kenneth David Kaunda, 28 ஏப்ரல் 1924), பரவலாக கேகே, 1964 முதல் 1991 வரை சாம்பியாவின் முதல் குடியரசுத் தலைவராக இருந்தவராவார்.
இசுக்காட்லாந்துத் திருச்சபையால் புனிதப்பணியில் சார்த்தப்பட்ட சமயப் பரப்பாளருக்கு பிறந்த எட்டு குழந்தைகளில் ஒருவராவார். இவரும் தமது தந்தையின் வழியிலேயே ஆசிரியராக உருவானார்.
பிரித்தானிய குடியேற்றத்திலிருந்து விடுதலை பெற நடைபெற்ற போராட்டத்தில் முன்னணி பங்காற்றினார். ஆபிரிக்க தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்து சாம்பிய ஆபிரிக்க தேசிய காங்கிரசை நிறுவினார். பின்னாளில் ஐக்கிய தேசிய விடுதலைக் கட்சித் தலைவரானார். விடுதலை பெற்ற சாம்பியாவின் முதல் குடியரசுத் தலைவராக பொறுப்பாற்றினார்.
1968ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய தேசிய விடுதலைக் கட்சியைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளையும் தடை செய்தார். அதே நேரம் முக்கிய பன்னாட்டு நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குகளை அரசுடமையாக்கினார். 1973ஆம் ஆண்டில் நேர்ந்த எண்ணெய் நெருக்கடியும் ஏற்றுமதி இறக்கமும் சாம்பியாவின் பொருளாதாரத்தை நெருக்கடியில் ஆழ்த்தியது.
இதனால் தாமியற்றிய விதிகளை மாற்ற கவுண்டாவிற்கு பன்னாட்டு அழுத்தம் எழுந்தது. 1991இல் பல-கட்சி தேர்தல்கள் நடந்தன; இதில் பல-கட்சி மக்களாட்சிக்கான இயக்கத்தின் தலைவர் பிரெடிரெக் சிலுபா கவுண்டாவை தோற்கடித்தார். 1999இல் இவரது சாம்பியக் குடியுரிமை விலக்கிக் கொள்ளப்பட்டது; ஆனால் அடுத்த ஆண்டே இந்த முடிவு திரும்பப் பெறபட்டது.
வெளியிணைப்புகள்[தொகு]
![]() |
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: கென்னத் கவுண்டா |