உள்ளடக்கத்துக்குச் செல்

கெசுரோலி மலைக்கோட்டை

ஆள்கூறுகள்: 27°32′56″N 76°42′41″E / 27.5489507°N 76.7114854°E / 27.5489507; 76.7114854
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலைக்கோட்டை, கெசுரோலியில் மலைப் பாதை.

கெசுரோலி மலைக்கோட்டை (Hill Fort Kesroli) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் உள்ள அல்வர் மாவட்டத்தில் அமைந்துள்ள 14ஆம் நூற்றாண்டு கோட்டையாகும். இது இப்போது நீம்ரானா உணவகக் குழுவால் நிர்வகிக்கப்படும் ஒரு பாரம்பரிய உணவாகமாகச் செயல்படுகிறது.[1] கோபுரங்கள், அரண்கள் மற்றும் வளைந்த வராண்டாக்களுக்கு பெயர் பெற்றது. இன்று இந்தியாவின் சிறந்த பாரம்பரிய உணவகங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

வரலாறு

[தொகு]
மலைக்கோட்டையில் உள்ள பிரதான மண்டபம், கெசுரோலி.

இது கிருட்டிணரின் வழித்தோன்றல்கள் என்று கூறப்படும் யது குல ராஜபுத்திரர்களால் 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. 14ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இசுலாம் மதத்திற்கு மாறிய பின்னர் இவர்கள் கன்சாதாசு என்று அழைக்கப்பட்டனர்.[2]

பல நூற்றாண்டுகளாக, ஏழு கோபுரங்கள் கொண்ட கோட்டை பல முறை கை மாறியுள்ளது. இது முகலாயர்கள் மற்றும் ஜாட்களால் கைப்பற்றப்பட்டது. பின்னர் இது 1775ஆம் ஆண்டில் அல்வார் சமசுதானம் நிறுவப்பட்ட நேரத்தில் ராஜபுத்திரர்களின் கைகளுக்கு வந்தது. ரணாவத் தாக்கூர் பவானி சிங் (1882-1934) ஆட்சியின் கீழ் இந்த கோட்டை ஒரு பொற்காலத்தை அறிந்திருந்தது.

2004ஆம் ஆண்டில், கோட்டையைப் பாரம்பரிய நிறுவனமான நீம்ரானா உணவகங்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்டது. இதைத் தொடர்ந்து, குழுவின் இணை உரிமையாளர்கள் மற்றும் மீட்டெடுத்தவர்களான அமன் நாத் மற்றும் பிரான்சிசு வச்சியார்க் ஆகியோரால் இது தற்பொழுது நிர்வகிக்கப்படுகிறது.[3][4]

விளக்கம்

[தொகு]

கெசுரோலியின் மலைக்கோட்டை 31 அறைகள் கொண்ட உணவகமாகச் செயல்படுகிறது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hill Fort Kesroli TripAdvisor.
  2. "About Us | Hill Fort, Alwar | Resorts in Kesroli, Rajasthan". www.neemranahotels.com.
  3. "Ruins revisited". The Hindu. 29 July 2004 இம் மூலத்தில் இருந்து 10 December 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041210064550/http://www.hindu.com/mp/2004/07/29/stories/2004072900680300.htm. 
  4. "The heritage tourism specialists". 31 October 2010. http://www.financialexpress.com/news/the-heritage-tourism-specialists/704943/0. 
  5. Panchali Dey, How a stay in 14th century Hill Fort-Kesroli will redefine all notions of a vacation?, Indiatimes.com, 7 August 2018

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கெசுரோலி_மலைக்கோட்டை&oldid=3859607" இலிருந்து மீள்விக்கப்பட்டது