இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.
கூள மாதாரி எனும் இந்த நாவல் சிறுவர்களை மையமாக வைத்து எழுதப்பட்டதாகும். சிறுவர்களின் பார்வையிலேயே இந்த நாவல் எழுதப்பட்டது. இந்த நாவலின் கதை நாமக்கல் மாவட்டம்திருச்செங்கோடு பகுதியில் மையமாக வைத்து எழுதப்பட்டிருந்தது. மேல் சாதி கவுண்டர்களுடைய வாழ்க்கையையும் அவர்களிடம் அடிமைகளைப் போல் வாழும் மாதாரி இன மக்களின் வாழ்க்கையையும் இந்தப் புதினத்தில் நாவலாசிரியர் பெருமாள் முருகன் பதிவு செய்துள்ளார். நாமக்கல் பகுதி வட்டார வழக்கு சொற்களும் இந்த நாவலில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டிருந்தது.