கூட்டிலங்காடி
கூட்டிலங்காடி | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 11°2′0″N 76°6′0″E / 11.03333°N 76.10000°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | மலப்புறம் |
அரசு | |
• நிர்வாகம் | ஊராட்சி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 36,602 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 676506 |
வாகனப் பதிவு | KL-53 |
அருகில் உள்ள நகரம் | மலப்புறம் |
மக்களவைத் தொகுதி | மலப்புறம் |
சட்டமன்றத் தொகுதி | மங்கடா |
கூட்டிலங்காடி (Koottilangadi) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு ஊராகும். இது கடலுண்டிப்புழா மற்றும் செருபுழா ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள ஊராகும். இதனால் இந்த ஊருக்கு இப்பெயர் கிடைத்தது. தேசிய நெடுஞ்சாலை 966 (முன்னாள் தே.நெ. 213), கோழிக்கட்டை மலப்புரம் மற்றும் பாலக்காட்டுடன் இணைக்கிறது, இச்சாலை கூட்டிலங்காடி வழியாக செல்கிறது. கடலுண்டி ஆற்றின் மீது கட்டப்பட்ட கூட்டிலங்காடி பாலம் மலப்புரம் நகராட்சியின் நுழைவாயிலாக கருதப்படுகிறது.
மக்கள்தொகையியல்
[தொகு]2001 இந்திய மக்கள் கணக்கெடுப்பின் படி, கூட்டலங்காடியின் மொத்த மக்கள் தொகை 36,602 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 17,734 என்றும், பெண்களின் எண்ணிக்கை 18,868 என்றும் உள்ளது. கூட்டிலங்காடி அதிகாரப்பூர்வமாக ஒரு ஊராட்சியாக இருந்தாலும், கூடிலங்கடி மலப்புரம் நகராட்சிக்கு அருகில் இருப்பதால், நகரின் தெற்கு நுழைவாயிலாக பல ஆண்டுகளாக வளர்ந்துள்ளது. இங்கு சிறிய சந்தையுடன் கூடிய பல வணிக நிறுவனங்களும் உள்ளன. இங்கு ஒரு அரசு பள்ளியும் உள்ளது.