கு. மு. கோபால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கு. மு. கோபால்
K.M.Gopal Portrait Photo.jpg
கு. மு. கோபால்
பிறப்புகு. மு. கோபால்
அக்டோபர் 21, 1928(1928-10-21)
சேலம் சேலம்
இறப்பு14 மார்ச்சு 2000(2000-03-14)
சேலம், தமிழ்நாடு
இறப்பிற்கான
காரணம்
இளைப்பிருமல்
கல்லறைகந்தம்பட்டி, சேலம்
இருப்பிடம்சேலம், சோழமண்டலம் ஓவிய கிராமம்
தேசியம்இந்தியா
மற்ற பெயர்கள்குட்டியாப்பிள்ளை முனுசாமிப்பிள்ளை கோபால்
கல்விநுண்கலைப் பட்டயம்
பணிஓவியர், படிமக்கலைஞர், கட்டடக் கலைஞர்
அறியப்படுவதுதந்ரீக ஓவிய, படிமக்கலை, கட்டட எழிற்கலை அறிஞர்
பட்டம்கலைச்செம்மல்
சமயம்இந்து
பிள்ளைகள்முதல்வன்,வஞ்சி, செம்மணி, கனக துர்கா, மீனாட்சி
உறவினர்கள்செலின் சார்ச்

குட்டியாப்பிள்ளை முனுசாமிப்பிள்ளை கோபால் (K. M. Gopal) இந்தியாவைச் சார்ந்த ஓவியர், படிம (சிற்ப), கட்டடக்கலைஞர். 1928இல் சேலத்திலுள்ள அன்னதானப்பட்டியில் பிறந்தார். இவரின் பெற்றோர் குட்டியாப்பிள்ளை முனுசாமிப்பிள்ளை, மாணிக்கம்மாள். சோழ மண்டலம் என்னும் ஓவியக் கிராமத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். [1]இவர் தமிழ்நாட்டு அரசின் அமைப்பான நுண்கலைக்குழுவிடமிருந்து கலைச் செம்மல் விருதினைப்பெற்றுள்ளார். பல்வகை படைப்புகளை அளித்துள்ள இவர் உலோகங்களில் தன் படைப்புகளை பெரும்பாலும் உருவாக்கியுள்ளார். இவர் பிள்ளையார் உருவங்ளை தந்ரீக முறையில் படைத்துள்ளார். [2]

கல்வி[தொகு]

சென்னையிலுள்ள கவின் கலைக்கல்லூரியில் இவர் நுண்கலைகலையில் பட்டயப்படிப்பினைப் பயின்றுள்ளார். இவர் தேவி பிரசாத் ராய் சௌத்ரியின் மாணவர். இவருடைய படைப்புப்பணிகளுககு மதிப்புறு முனைவர் பட்டத்தினையும் பெற்றுள்ளார்.[1] [3]

தந்ரீகப் படைப்புகள்[தொகு]

கு. மு. கோபால் உருவாக்கிய பிள்ளையாரின் தந்ரீக புடைப்புப் படிமம்

தமி்ழ்நாட்டினைச் சார்ந்த படைப்பாளர்களில் கு. மு. கோபாலின் படைப்புகள் தந்ரீக வகையைச் சார்ந்தது. [4]பிள்ளையாரின் உருவங்களை முற்றிலும் மாறுபட்ட வடிவங்களில் இவர் வெளிப்படுத்தியுள்ளார். பிள்ளையார் என்றாலே பெரிய வயிறு அல்லது தொப்பையுடன் காணப்படும் ஒன்றாகவே அனைத்து படைப்பாளர்களும் காட்சிப்படுத்தியுள்ளனர். ஆனால், இவர் வயிற்றைச் சிறிய ஒன்றாகக் காட்சிப்படுத்தியுள்ளார். இளம் பிள்ளையார் படிமத்தினை குழந்தை ஒன்று கால்களை நீட்டி அமர்ந்திருக்கும் வகையில் வெளிப்படுத்தியுள்ளார். பிள்ளையாரைப் பெண் வடிவில் கணேசுவரி என்னும் பெயரில் காட்சிப்படுத்தியுள்ளார்.[2] [5] இவருடைய படைப்புகளில் காணப்படும் இந்து கடவுளர்களின் குறியியலை ஓவியர் இந்திரன் ஆராய்ந்துள்ளார்.[6]

கலைப்பணிகள்[தொகு]

கு. மு. கோபாலின் பத்திக் வேலைப்பாடு

இந்தியாவின் பல பகுதிகளிலும் உலகநாடுகள் பலவற்றிலும் இவர் தன் தந்ரீக, புதுமைப்படைப்புகளை காட்சிப்படுத்தி கண்காட்சிகளை நடத்தியுள்ளார். சப்பானில் 1980ஆம் ஆண்டிலும் ஆத்திரேலியாவில் 1982ஆம் ஆண்டிலும் செருமனியில் 1984ஆம் ஆண்டிலும் தென்மார்க்கில் 1988 ஆம் ஆண்டிலும் நெதர்லாந்தில்1989ஆம் ஆண்டிலும் இவர் தன் படைப்புகளுக்கான கண்காட்சிகளை நடத்தியுள்ளார். இவருடைய படைப்புக்கண்காட்சியை மேனாள் இந்தியக்குடியரசுத் தலைவர் ஆர்.வி. வெங்கட்ராமன் திறந்து வைத்துள்ளார். செமினி, வாகினி ஆகிய திரைக்கூடங்களில் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். நாட்டிய மணிகள் இலலிதா, பத்மினி, வைசெயந்திமாலா, இராகிணி ஆகியோரின் நாட்டியங்களுக்கு தபேலா இசைத்துள்ளார்.[7] இவருடைய அர்த்த கணேசுவரி என்னும் புடைப்புப்படிமத்தினை இந்திய அரசின் இந்திய அருங்காட்சியங்கங்கள் என்னும் வலைக்களத்தில் எண்மியப்படமாக வெளியிட்டு ஆவணப்படுத்தியுள்ளது.[8]

பரிசுகள், விருதுகள்[தொகு]

இவர் 1950இல் மைசூர் தசரா கண்காட்சியில் முதல் பரிசினைப் பெற்றுள்ளார்.[7] 1988இல் இந்திய அளவில் நடந்த கண்காட்சியல் முதல் பரிசினைப் பெற்றார். இவருடையை கலைப்பணிகளைப் பாராட்டி தமி்ழ்நாட்டு அரசு இவருக்கு கலைச்செம்மல் விருதினை வழங்கியுளளது. இந்திய அரசு இவருக்கு 1988இல் இலலித் கலா அகாதமியின் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கியுள்ளது. [9] இவரின் கலைப்புலமையைப் பாராட்டி இங்கிலாந்து அரசு ‘வருகைதரு ஓவியர்’ என்னும் மதிப்பினை அளித்தது.

தொடங்கிய அமைப்புகள்[தொகு]

இவர் 1976ஆம் ஆண்டில் மறுமலர்ச்சி ஓவியர் எழுத்தாளர் மன்றத்தைத் தொடங்கினார்.[1] 1979ஆம் ஆண்டில் கலை வளர்ச்சிக்கான அமைப்பாக ‘’’கலை மையம்’’’ என்னும் அமைப்பினை கவிஞர் கண்ணதாசன், பெருந்தச்சர் கணபதி, கலை இயக்குநர் இராகவன், கலை இயக்குநர் தோட்டாதரணி ஆகியோருடன் இணைந்து சென்னையில் தொடங்கினார், பிறகு இந்த அமைப்பு செயற்படாமல் போனது. இவரின் இறப்பிற்குப்பின் இவருடைய மகள் மீனாட்சி, மருமகன் செலின் சார்ச் ஆகியோர் ஐக்கிய இராச்சியத்தில் கலை மையத்தினை 2015இல் தொடங்கினார்கள். 2018இல் இருந்து இவ்வமைப்பு பன்னாட்டு அளவில் கலைப்புலத்தில் சிறந்து விளங்குவோருக்கு தகைமை விருதுகளை வழங்கி வருகின்றது. [10]

இறப்பு[தொகு]

நெஞ்சக நோயால் பாதிக்கப்பட்ட இவர் 2000 இல் சேலத்தில் இறந்தார். இவருடைய நினைவிடம் சேலத்திலுள்ள கந்தம்பட்டியில் உள்ளது.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._மு._கோபால்&oldid=2794008" இருந்து மீள்விக்கப்பட்டது