உள்ளடக்கத்துக்குச் செல்

குஷ்தேவா சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குஷ்தேவா சிங் (Khushdeva Singh)(1902-1985) என்பவர் இந்திய மருத்துவர் மற்றும் சமூக சேவகர் ஆவார். இந்தியாவில் காசநோய் சிகிச்சைக்கான இவரது பங்களிப்புகளுக்காக அறியப்பட்டவர்.[1] இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாட்டியாலாவில் பிறந்த இவர், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தரம்பூரில் உள்ள ஹார்டிங் சானடோரியத்தில்[2] பெரும்பாலான சேவையாற்றினார்.[1] பாட்டியாலாவில் உள்ள தொழுநோயாளிகளின் மறுவாழ்வுக்காகத் தொழுநோயாளிகள் நலச் சங்கத்தை நிறுவினார்.[3] பலரும் இவரை மதச்சார்பற்ற பார்வை கொண்ட ஒரு மனிதநேய வாதி என்று பாராட்டுகின்றனர். இந்தியப் பிரிவினையின் போது இவர் பல முஸ்லிம்களுக்கு அளித்த சிகிச்சை குறிப்பிடத்தக்கது.[2][4][5] அர்ப்பணிப்பு [6] [7] மற்றும் வெறுப்பைக் காட்டிலும் காதல் வலிமையானது பொருண்மையில் புத்தகங்களை இவர் எழுதியுள்ளார்.[8] 1957ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம் தேசத்திற்கான இவரது சேவைக்காக நான்காவது உயரிய இந்தியக் குடிமகன் விருதான பத்மசிறீ விருதை இவருக்கு வழங்கியது.[9] பாட்டியாலாவில் உள்ள மார்பக நோய்களுக்கான மருத்துவமனைக்கு இவரது நினைவாக சிறி மருத்துவர் குஷ்தேவா சிங் மார்பக நோய்களுக்கான மருத்துவமனை எனப் பெயரிடப்பட்டது. [10] [11]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 Themes in Indian History.
 2. 2.0 2.1 Revenge and Reconciliation.
 3. Rotary International (April 1965). "The Rotarian". The Rotarian 106 (4): 72. பன்னாட்டுத் தர தொடர் எண்:0035-838X. https://books.google.com/books?id=tjMEAAAAMBAJ&q=Dr.+Khushdeva+Singh&pg=PA53. 
 4. "Insaniyat amidst insanity - Some recollections of 1947". India. 16 October 2005. பார்க்கப்பட்ட நாள் 20 March 2018.
 5. The Great Partition: The Making of India and Pakistan.
 6. In Dedication - 1.
 7. In Dedication - 2.
 8. Love is Stronger Than Hate: A Remembrance of 1947.
 9. "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
 10. "Padma Shri Dr. Khushdeva Singh Hospital for Chest Diseases". Here.com. 2015. பார்க்கப்பட்ட நாள் 3 April 2015.
 11. "Isithackday". Isithackday. 2015. Archived from the original on 6 April 2015. பார்க்கப்பட்ட நாள் 3 April 2015.

மேலும் படிக்க[தொகு]

 • Khushdeva Singh (1973). Love is Stronger Than Hate: A Remembrance of 1947. Guru Nanak Mission, Patiala. p. 117.
 • Khushdeva Singh, Dr. (1968). In Dedication - 1. Jain Co. Booksellers, Patiala. p. 76.
 • Khushdeva Singh, Dr. (1974). In Dedication - 2. Guru Nanak Mission, Patiala. p. 92.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குஷ்தேவா_சிங்&oldid=3404365" இலிருந்து மீள்விக்கப்பட்டது