குவெண்டலின் புரூக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவெண்ட்லின் ப்ரூக்ஸ்
Gwendolyn Brooks
பிறப்புகுவெண்ட்லின் எலிசபெத் ப்ரூக்ஸ்
சூன் 7, 1917(1917-06-07)
டொபீகா, கேன்சஸ்,  ஐக்கிய அமெரிக்கா
இறப்புதிசம்பர் 3, 2000(2000-12-03) (அகவை 83)[1] About . Contact . Shout-outs . Team . Terms
சிகாகோ, இலினொய்,  ஐக்கிய அமெரிக்கா
தொழில்கவிஞர்
தேசியம்அமெரிக்கர்
காலம்1930–2000
குறிப்பிடத்தக்க படைப்புகள்எ ஸ்ட்ரீட் இன் ப்ரான்ஸ்வில் (1945), அன்னி ஆலன் (1946), வின்னீ
குறிப்பிடத்தக்க விருதுகள்புலிட்சர் பரிசு (1950)
ராபர்ட்பிரோச்ட் பதக்கம் (1989)
துணைவர்என்றி பிளேக்லி (தி. 1939)
பிள்ளைகள்என்றி, நோரா

குவெண்டலின் புரூக்ஸ் (Gwendolyn Brooks, சூன் 7, 1917 - திசம்பர் 3, 2000) என்றறியப்படும் குவெண்டலின் எலிசபெத் புரூக்ஸ் அமெரிக்க பெண் கவிஞராகவும், புலிட்சர் பரிசு பெற்ற முதல் ஆப்பிரிக்க பெண்மணியாகவும் அறியப்படுகிறார். 1949-ல் வெளிவந்த தனது இரண்டாவது தொகுப்பான, அன்னி ஆலன் என்ற படைப்புக்கு 1950-ல் புலிட்சர் பரிசு கிடைத்தது.[2]

பிறப்பு[தொகு]

குவெண்டலின் புரூக்ஸ், ஐக்கிய அமெரிக்காவின் கேன்சஸ் மாநிலத் தலைநகர் டொபீகாவில், 1917-ம் ஆண்டு சூன் 7-ம் நாள் மிகவும் சாதாரண கறுப்பின குடும்பத்தில் பிறந்தார்.[3]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

குவெண்ட்லின் 6 வாரக் குழந்தையாக இருக்கும்போது, அவரது குடும்பம் ஐக்கிய அமெரிக்காவின் இலினொய் மாநிலத்திலுள்ள சிகாகோவில் குடியேறியது. தனது 7-வது வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கிய குவெண்டலினை, பள்ளி ஆசிரியையான அவரது தாய், இவரை அப்போதே ஒரு கவிஞராகப் பார்க்கத் தொடங்கினார். அவரது தந்தையோ, தன் குட்டிப் பெண் எழுதவும் படிக்கவும் ஏதுவாக, மேசை, நாற்காலி, அலமாரி மற்றும் நிறைய புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தார். இவரது முதல் கவிதை 13-வது வயதில் குழந்தைகள் இதழ் ஒன்றில் வெளியானது, மேலும் தமது 16 வயதுக்குள் 75 கவிதைகள் எழுதி வெளியிட்டார். ஹைட் பார்க் உயர்நிலை பள்ளி, ஈங்கிள்வுட் உயர்நிலை பள்ளி, வென்டெல் பிலிப்ஸ் அகாடமி உயர்நிலை பள்ளி போன்ற பள்ளிகளில் ஆரம்ப கல்வியை பயின்றவர், 1936-ஆம் ஆண்டில் வில்சன் ஜூனியர் கல்லூரியில் பட்டம் பெற்றார்.[3]

இனப்பாகுபாடு[தொகு]

இனப் பாகுபாடு காரணமாக பள்ளிகளில் ஏற்பட்ட மோசமான அனுபவங்களால், மேற்கொண்டு படிப்பதில்லை என்று முடிவெடுத்த ப்ரூக்ஸ், படிப்பை நிறுத்திக்கொண்டார். எழுத்தாளராகவேண்டும் என்று தீர்மானித்தவர், அலுவலக உதவியாளர், செயலாளர் போன்ற வேலைகளும் பார்த்து வந்தார். வெள்ளையினப் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட கவிதைப் பயிலரங்குகளில் பங்கேற்றார். இவரது கவிதைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இவரது முதல் கவிதை நூலான ‘எ ஸ்ட்ரீட் இன் ப்ரான்ஸ்வில்’ என்ற படைப்பு 1945-ல் வெளிவந்து, பரவலாக பாராட்டு பெற்றது. சமூகத்தின் செயல்பாடுகளுக்கு கடுமையாக பதில் அளிக்கும் விதமாக இவரது கவிதைகள் அமைந்தன.[4]

புதியதொரு கவிதை வடிவம், பாணி குறித்து அலட்டிக்கொள்ளாத குவெண்டலின், அதன் கருவில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார். சாதாரண ஆப்பிரிக்க, அமெரிக்கரின் வேதனை மிகுந்த வாழ்க்கை, ஏழ்மை மற்றும் இனப்பாகுபாடு கொடுமைகளுக்கு எதிரான அவர்களது போராட்டம் ஆகியவையே இவரது கருப்பொருட்களாக அமைந்தன.[4]

படைப்பு, பரிசு, பட்டம்[தொகு]

1949-ல் வெளியான ‘ஆனி ஆலன்’ என்ற கவிதை படைப்பு குவெண்டலினுக்கு 1950-ல் ‘புலிட்சர் பரிசை’ பெற்றுத் தந்தது. மேலும், 1953-ல் ‘மூட் மார்த்தா’ எனும் நாவல் சுயசரிதை வடிவில் அமைந்தது. 1962-ல் ‘லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்’ கவிதை விழாவில் தனது கவிதையை வாசிக்குமாறு அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி இவருக்கு அழைப்பு விடுத்தார்.[5]

சிகாகோ, 1963-ல் அவரது முதல் ஆசிரியப் பணி கொலம்பியா கல்லூரியில் ஒரு கவிதை பட்டறையாக தொடங்கியது. அதைத்தொடர்ந்து, இலினாய்ஸ் பல்கலைக்கழகம், சிகாகோ மாநில பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் படைப்புத் திறன் குறித்து கற்பித்தவர். குழந்தைகள், குடும்பச் சுமை எதுவும் தன் எழுத்துகளுக்கு தடங்கல் ஏற்படுத்தாமல் பார்த்துக்கொண்டார். ஏராளமான கவிதைகளை எழுதி, பல தொகுதிகளாக வெளியிட்டார்.[5]

அமெரிக்கன் கலை அகாடமி விருது, கவிதை இதழ் விருது, ராபர்ட் பெர்கூசன் நினைவு விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட ஏராளமான விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ள குவெண்டலினுக்கு, உலகம் முழுவதும் சுமார் 75 பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கின.[5]

இறப்பு[தொகு]

தமது விடாமுயற்சியாலும் எழுத்தாற்றலாலும் ஆங்கில இலக்கியக் களத்தில் தனி முத்திரை பதித்த குவெண்டலின் ப்ரூக்ஸ், ஐக்கிய அமெரிக்காவின் இலினொய் மாநிலத்திலுள்ள சிகாகோவில் 2000-வது ஆண்டின் திசம்பர் 3-ம் நாள் தனது 83-வது அகவையில் மறைந்தார்.[6]

குவெண்டலின் புரூக்ஸின் காலப்பதிவு[தொகு]

  • 1917: சூன் 7-ம் நாள், குவெண்டலின் ப்ரூக்ஸ் அமெரிக்காவின் கேன்சஸ் மாநிலத்தில் டொபீகா மாநகரில் பிறந்தார்.
  • 1924: குவெண்டலின், 7-வது அகவையில் எழுத்துப்பணியை தொடங்கினார்.
  • 1933: ப்ரூக்ஸ், கவிதை தொடர, "லங்ஸ்டன் ஹியூஸ்" மற்றும் "ஜேம்ஸ் வெல்டன் ஜான்சன்" மூலம் ஊக்குவிக்கப்பட்டது.
  • 1934: குவெண்டலின், ஈங்கிள்வுட் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார்.
  • 1936: குவெண்டலின், வில்சன் ஜூனியர் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
  • 1939: ஹென்றி லோவிங்டன் பிளேக்லியை மூன்றாம் திருமணம் செய்தார்.
  • 1940: அவரது முதல் குழந்தையை, (ஹென்றி ஜூனியர்) பெற்றெடுத்தார்.
  • 1945: "எ ஸ்ட்ரீட் இன் ப்ரான்ஸ்வில்" எனும் படைப்பு வெளியானது.
  • 1949: "அன்னி ஆலன்" எனும் படைப்பு வெளியானது.
  • 1950: குவெண்டலின் புரூக்ஸ் புலிட்சர் விருது பெற்றார்.
  • 1951: ஒரு பெண் குழந்தையை, (என்றி நோரா பிளேக்லி) பெற்றெடுத்தார்.
  • 1953: அவரின் 'மாட் மார்தா' என்ற நாவல் வெளியிடப்பட்டது.
  • 1956: குவெண்டலின் 'பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்' வெளியிடப்பட்டது.
  • 1960: ப்ரூக்ஸின் 'பீன் ஈட்டர்ஸ்' வெளியிடப்பட்டது.
  • 1963: அவரது 'தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்' வெளியிடப்பட்டன.
  • 1966: அவரின் 'நாம் ரியல் கூல்' படைப்பு வெளியானது.
  • 1967: 'த வால்' என்ற தொகுப்பு வெளியிடப்பட்டது.
  • 1968: 'இன் த மெக்கா' வெளியிடப்பட்டது.
  • 1969: இல்லினாய்ஸ் அரசவைக் கவிஞர் ஆனார்.
  • 1970: அவர்களின் குடும்ப படங்கள் 'வெளியிடப்பட்டது.
  • 1970: குவெண்டலினின் 'கலகம்' (‘Riot’) எனும் படைப்பு வெளியானது.
  • 1971: 'த வோல்ட் ஆப் குவெண்டலின் ப்ரூக்ஸ்' மற்றும் 'அரோரா' வெளியானது.
  • 1972: சுய சரிதையான பாகம் ஒன்று வெளியிடப்பட்டது.
  • 1975: பேக்கோனிங்க்ஸ் (Beckonings) வெளியானது.
  • 1981: 'ப்ளாக் லவ்' என்ற படைப்பு வெளியானது.
  • 1981: அவரின் “டு டிசெம்பர்க்” வெளியிடப்பட்டது.
  • 1985: காங்கிரஸ் நூலக 29-வது ஆலோசகராக நியமனம்.
  • 1986: “த நியர்-ஜோகன்னஸ்பர்க் பாய்” மற்றும் பிற கவிதைகள் வெளியானது.
  • 1987: “ப்ளாக்ஸ்” என்ற தொகுப்பு வெளியிடப்பட்டது.
  • 1988: “வின்னீ” என்ற படைப்பு வெளியிடப்பட்டது.
  • 1988: குவெண்டலின் ஆஃப் ஃபேம் எனும் பெண்கள் கூடத்தில் இணைத்துக்கொண்டார்.
  • 1989: இலக்கிய கலைகளுக்கான, தேசிய சட்டமசோதா மூலம் மூத்த பெல்லோஷிப் என கவுரவிக்கப்பட்டார்.
  • 1990: ஒரு இலக்கிய விருது பெற்றார்.
  • 1991: 'சில்ரன் கம்மிங் ஹோம்' வெளியிடப்பட்டது.
  • 1994: தேசிய புத்தக அறக்கட்டளை மூலம் அமெரிக்க எழுத்துகளுக்கு வேறுபாடு பங்களிப்பு பதக்கம் வழங்கியது.
  • 1994: தேசிய அறக்கட்டளை மூலம் விரிவுரையாளர் ஜெபர்சன், வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினார்.
  • 1995: குவெண்டலின், கலைக்கான தேசிய பதக்கம் வென்றார்.
  • 1997: ப்ரூக்ஸ், லிங்கன் அரசவை விருது பெற்றார்.
  • 1998: ஆப்பிரிக்க வம்சாவளி எழுத்தாளர்கள் ஆஃப் ஃபேம் சர்வதேச இலக்கிய பங்கு.
  • 2000: டிசம்பர் 3-ல், குவெண்டலின் ப்ரூக்ஸ் காலமானார்.[6]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. Gwendolyn Brooks Bio|© FamousBirthdays.com 2016
  2. Annie Allen | வலைக்காணல்: சூன் 20 2016
  3. 3.0 3.1 Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).
  4. 4.0 4.1 "Gwendolyn Brooks Biography-Early career". www.notablebiographies.com (ஆங்கிலம்). Oct 12, 2011 @ 9:21 pm. 21 சூன் 2016 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
  5. 5.0 5.1 5.2 Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).
  6. 6.0 6.1 Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).

புற இணைப்புகள்[தொகு]