குவாக்காடா தேசியப் பூங்கா

ஆள்கூறுகள்: 21°51′14″N 90°05′27″E / 21.853960°N 90.090764°E / 21.853960; 90.090764
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவாக்காடா தேசியப் பூங்கா
Kuakata National Park
அமைவிடம்பதுவாகாளி, வங்காளதேசம்
ஆள்கூறுகள்21°51′14″N 90°05′27″E / 21.853960°N 90.090764°E / 21.853960; 90.090764
பரப்பளவு1613 எக்டேர்கள்
நிறுவப்பட்டது24 அக்டோபர் 2010

குவாக்காடா தேசியப் பூங்கா (Kuakata National Park) வங்காளதேசத்தில் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் ஒரு பூங்காவாகும்.[1] பதுவாகாளி மாவட்டத்தின் கீழுள்ள கலபாரா துணை மாவட்டத்தில் குவாக்காடா தேசியப் பூங்கா அமைந்துள்ளது. வங்காளதேச அரசாங்கத்தின் கழுகு பாதுகாப்பு மண்டலம்-2 என்ற அட்டவணையின்படி இப்பூங்கா கழுகுகளுக்கான பாதுகாப்பான மண்டலங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.[1] [2]

தாவரங்கள், விலங்கினங்கள், இயற்கை மற்றும் சுற்றுலா வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்திற்காக 1613 எக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ள[3] குவாக்காடா தேசியப் பூங்கா 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதியன்று வங்காளதேச அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக தேசிய பூங்கா என அறிவிக்கப்பட்டது.[1][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "National Parks". bforest.gov.bd. பார்க்கப்பட்ட நாள் 8 June 2020.
  2. "Vulture Safe Zone". bforest.gov.bd (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 June 2020.
  3. 3.0 3.1 "Biodievsrity Flora_NCS" (PDF). bforest.portal.gov.bd. பார்க்கப்பட்ட நாள் 8 June 2020.