பதுவாகாளி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வங்காளதேசத்தில் பதுவாகாளி மாவட்டத்தின் அமைவிடம்

பதுவாகாளி மாவட்டம் (Patuakhali District) (வங்காள: পটুয়াখালী) தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் பரிசால் கோட்டத்தில் அமைந்துள்ளது.[1] வங்காளதேசத்தின் தெற்கில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பதுவாகாளி நகரம் ஆகும்.

பதுவாகாளி நகரம்[தொகு]

மாவட்டத் தலைமையிட நகரமான பதுவாகாளி நகரத்தைச் சுற்றி மூன்று ஆறுகள் பாய்கிறது. இந்நகரத்தின் முக்கிய ஆறுகளான லௌகத்தி ஆறு மற்றும் லொஹாலியா ஆறுகள் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இந்நகரத்தில் ஒரு உள்ளூர் வானூர்தி நிலையம் உள்ளது. மேலும் ஆற்று நீர் வழிச்சாலையில் படகுகள் மூலம் சரக்குகள் மற்றும் பயணிகளின் போக்குவரத்து நடைபெறுகிறது. இந்நகரம் அமைந்த வங்காள விரிகுடா கடறகரையில் நாள் தோறும் அருணோதயம் எனப்படும் விடியலையும், சூரிய அஸ்தமனம் எனப்படுன் பொழுது புலர்தலையும் காணலாம்.

மாவட்ட எல்லைகள்[தொகு]

3221.31 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[2] பதுவாகாளி மாவட்டத்தின் வடக்கில் பரிசால் மாவட்டமும், தெற்கில் வங்காள விரிகுடா மற்றும் பர்குனா மாவட்டமும், கிழக்கில் போலா மாவட்டம் மற்றும் தெதுலியா ஆறும், மேற்கில் பர்குனா மாவட்டமும் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

பரிசால் கோட்டத்தில் 3221.31 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ள பதுவாகாளி மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக பதுவாகாளி, மிர்சாகஞ்ச், பவ்ப்பல், கொலாச்சிபா, கொலாபாரா, தஸ்மினா, தும்கி மற்றும் ரங்கபலி எனும் எட்டு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டம் ஐந்து நகராட்சி மன்றங்களையும், எழுபத்தி ஒன்று கிராம ஒன்றியக் குழுக்களையும், 561 வருவாய் கிராமங்களையும், 878 கிராமங்களையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 8600 ஆகும். தொலைபேசி குறியிடு எண் 0441 ஆகும்.

இம்மாவட்டம் நான்கு வங்காளதேச நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. [3]

பொருளாதாரம்[தொகு]

பதுவாகாளி மாவட்டத்தில் தேத்துலியா ஆறு, லௌகத்தி ஆறு மற்றும் லொஹாலியா ஆறு, பங்க்சியா ஆறு, அகுன்முக்கா ஆறு, அந்தர்மாணிக், பைரா, பூரா, கௌரிகங்கா முதலிய ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், மண் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் பாயும் அனைத்து ஆறுகளும் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இங்கு நெல், சணல், வெற்றிலை, மா, கொய்யா, பப்பாளி, ஆரஞ்ச், அன்னாசி, பாக்கு முதலியவைகள் விளைகிறது. இம்மாவட்டத்தின் பொருளாதாரம் வேளாண்மைத் தொழில் மற்றும் மீன் பிடித் தொழிலைச் சார்ந்து உள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

3221.31 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 15,35,854 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 7,53,441 ஆகவும், பெண்கள் 7,82,413 ஆகவும் உள்ளனர். ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.49% ஆக உள்ளது. பாலின விகிதம் 96 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 477 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 54.1% ஆக உள்ளது.[4]இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.

கல்வி[தொகு]

வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்பு உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப் பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைப் பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப் பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப் படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப் படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Jerin, Iffat (2012). "Patuakhali District". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/indexphp?title=Patuakhali_District. 
  2. Jerin, Iffat (2012). "Patuakhali District". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/indexphp?title=Patuakhali_District. 
  3. [ http://aboutbangladesh71.blogspot.in/2013/01/patuakhali-district-bangladesh.html Patuakhali District, Bangladesh]
  4. [ http://203.112.218.65/WebTestApplication/userfiles/Image/PopCen2011/COMMUNITY_Patuakhali.pdf COMMUNITY REPORT:PATUAKHALI]

வெளி இணைப்புகள்[தொகு]

22°21′15″N 90°19′05″E / 22.3542°N 90.3181°E / 22.3542; 90.3181ஆள்கூறுகள்: 22°21′15″N 90°19′05″E / 22.3542°N 90.3181°E / 22.3542; 90.3181

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதுவாகாளி_மாவட்டம்&oldid=2178544" இருந்து மீள்விக்கப்பட்டது