குளோரோபியூட்டனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளோரோபியூட்டனால்
Chlorobutanol
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,1,1-டிரைகுளோரோ-2-மெத்தில்புரோப்பேன்-2-ஆல்
வேறு பெயர்கள்
1,1,1-டிரைகுளோரோ-2-மெத்தில்-2-புரோப்பனால்; குளோரோபியூட்டால்; குளோரெட்டான்; குளோரெட்டோன்; குளோர்ட்ரான்; டிரைகுளோரோ -டெர்ட்-பியூட்டைல் ஆல்ககால்; 1,1,1- டிரைகுளோரோ -டெர்ட்- பியூட்டைல் ஆல்ககால் ; 2-(டிரைகுளோரோமெத்தில்)புரோப்பேன்-2-ஆல், 1,1,1-டிரைகுளோரோ-2-மெத்தில்-2-புரோப்பேனால்; டெர்ட்-டிரைகுளோரோபியூட்டைல் ஆல்ககால்; டிரைகுளோரோ-டெர்ட்-பியூட்டேனால்; டிரைகுளோரோ ஐசோபியூட்டைல் ஆல்க்கால்; 2,2,2-டிரைகுளோரோ-1,1-டைமெத்தில்யெத்தனால்
இனங்காட்டிகள்
57-15-8 Y
ChEMBL ChEMBL1439973 N
ChemSpider 13842993 Y
EC number 200-317-6
InChI
  • InChI=1S/C4H7Cl3O/c1-3(2,8)4(5,6)7/h8H,1-2H3 Y
    Key: OSASVXMJTNOKOY-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C4H7Cl3O/c1-3(2,8)4(5,6)7/h8H,1-2H3
    Key: OSASVXMJTNOKOY-UHFFFAOYAO
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D01942 Y
பப்கெம் 5977
SMILES
  • ClC(Cl)(Cl)C(C)(C)O
UNII HM4YQM8WRC Y
பண்புகள்
C4H7Cl3O
வாய்ப்பாட்டு எடை 177.45 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
மணம் மெந்தால்
உருகுநிலை 95–99 °C (203–210 °F; 368–372 K)
கொதிநிலை 167 °C (333 °F; 440 K)
சிறிதளவு கரையும்
அசிட்டோன்-இல் கரைதிறன் கரையும்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் Xn
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

குளோரோபியூட்டனால், அல்லது முக்குளோரோ-2-மெதில்-2-புரோப்பனால் (Chlorobutanol, or trichloro-2-methyl-2-propanol)என்பது பாதுகாப்பு வேதிப்பொருளாகவும், மயக்க மருந்தாகவும் உறக்க ஊக்கியாகவும், வீரியம் குறைந்த ஓரிடவுணர்ச்சி நீக்கியாகவும் பயன்படும் ஒரு வேதிச் சேர்மம் ஆகும். குளோரால் நீரேற்றின் இயற்பியல் பண்புகளையே இதுவும் இத்திருக்கிறது.இது பாக்டீரிய எதிர்ப்பு மற்றும் காளான் எதிர்ப்புப் பண்புகளைப் பெற்றுள்ளது. பல்வகை இடுபொருள் உருவாக்கலின் போது 0.5% செறிவுள்ள குளோரோபியூடனால் சேர்ப்பதன் முலம் பலவகை இடுபொருள்களின் நிலைப்புதன்மை நீண்ட காலத்திற்கு நீடித்து இருக்கிறது. எனினும் இதன் 0.05% நீர்மக் கரைசல் எதிர் நுண்ணுயிரின் செயல்திறன் பெற்றுள்ளது.  தூய நிலையில் இது வெண்மை நிறம் கொண்டுள்ளது. இது மென்தால் போன்று வாடையும் எளிதில் ஆவியகக்கூடிய திண்மப்பொருளாகவும் காணப்படுகிறது.

வேதித்தொகுப்பு[தொகு]

அசிட்டோன் உடன் குளோரோஃபார்ம் ஓர் எளிய கருகவர் சேர்ப்பு வினைக்கு உட்பட்டு குளோரோபியூடனால் என்னும் சேர்மத்தைத் தருகிறது. இவ்வினை பொட்டாசியம் ஐதராக்சைடு அல்லது ஐதராக்சைடு போன்ற காரங்களால் தூண்டப்பட்டு துரிதப்படுத்தப்படுகிறது.

நச்சுத்தன்மை[தொகு]

குளோரோபியூட்டனால் அதிக நச்சுத்தன்மை உடையது ஆகும். இது கல்லீரலைப் பெரிதும் பாதிக்கிறது மேலும் தோலில் நமைச்சலையும் கண்களில் எரிச்சலையும் ஏற்படுத்துகிறது[1]. இருப்பினும் குளோரோபியூட்டனால் ஒரு உணர்வு நீக்கியாகப் பயன்படுகிறது[2] .

மேற்கோள்கள்[தொகு]

  1. "MSDS" (PDF). Archived from the original (PDF) on 2013-11-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-05.
  2. Embryologia 1956

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரோபியூட்டனால்&oldid=3550894" இலிருந்து மீள்விக்கப்பட்டது