குளுடாரிக் அமிலம்
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பென்டேன் டையோயிக் அமிலம்
| |
வேறு பெயர்கள்
புரோபேன் -1,3- டைகார்பாக்சிலிக் அமிலம்; 1,3-புரோபேன் டைகார்பாக்சிலிக் அமிலம்; பென்டேன் டையோயிக் அமிலம்; n-பைரோ டார்டாரிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
110-94-1 | |
ChEMBL | ChEMBL1162495 |
ChemSpider | 723 |
EC number | 203-817-2 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C00489 |
பப்கெம் | 743 |
| |
பண்புகள் | |
C5H8O4 | |
வாய்ப்பாட்டு எடை | 132.12 கி/மோல் |
உருகுநிலை | 95-98 °செ |
கொதிநிலை | 200 °செ/20 மிமிபாதரசம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
குளுடாரிக் அமிலம் (Glutaric acid) என்னும் இந்தக் கரிமச் சேர்மத்தின் வாய்பாடு: HO2C(CH2)3CO2H. இதனுடன் தொடர்புடைய "நேரோட்ட" டைகார்பாக்சிலிக் அமிலங்களான அடிபிக் மற்றும் சக்சினிக் அமிலங்கள் அறை வெப்ப நிலையில் சிறிதளவே நீரில் கரையும் தன்மையைக் கொண்டிருந்தாலும், குளுடாரிக் அமிலமானது ஐம்பது சதவிகிதத்திற்கு (50%) மேல் நீரில் கரையும் தன்மைக் கொண்டது.
தயாரிப்பு
[தொகு]பியூட்டைரோ லேக்டோன் வளையத்தைப் பொட்டாசியம் சயனைட் கொண்டு திறப்பதன் மூலம் கிடைக்கும் கலந்த பொட்டாசியம்-கார்பாக்சிலேட்-நைட்டிரைலை நீராற் பகுத்து இந்த டைகார்பாக்சிலிக் அமிலம் உருவாக்கப்படுகின்றது.[1] மாற்றாக, நீராற் பகுத்த பின், டைஹைட்ரோபிரானை உயிர்வளியேற்றம் செய்வதன் மூலமும் குளுடாரிக் அமிலம் பெறப்படுகிறது. மற்றொரு முறையில், டைபுரோமோபுரோபேனை சோடியம் அல்லது பொட்டாசியம் சயனைடுடன் வினைபுரிய வைத்துக் கிடைக்கும் டைநைட்டிரைலை நீராற் பகுத்து குளுடாரிக் அமிலத்தை உருவாக்கலாம்.
பயன்கள்
[தொகு]பொதுவான நெகிழியாக்கி மற்றும் பாலி எஸ்டர்களின் முன்னோடியான 1,5-பென்ட்டேன்டையோல், குளுடாரிக் அமிலம் மற்றும் அதன் வழிப் பொருள்களைக் கொண்டுத் தயாரிக்கப்படுகின்றது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ G. Paris, L. Berlinguet, R. Gaudry, J. English, Jr. and J. E. Dayan (1963). "Glutaric Acid and Glutaramide". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv4p0496.; Collective Volume, vol. 4, p. 496
- ↑ Peter Werle and Marcus Morawietz "Alcohols, Polyhydric" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry: 2002, Wiley-VCH: Weinheim. DOI 10.1002/14356007.a01_305