அடிபிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடிபிக் அமிலம்
Adipic acid
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஹெக்சேன்டையோயிக் அமிலம்
வேறு பெயர்கள்
ஹெக்சேன்-1,6-டையோயிக் அமிலம்
இனங்காட்டிகள்
124-04-9 Y
ChEBI CHEBI:30832 Y
ChEMBL ChEMBL1157 Y
ChemSpider 191 Y
EC number 204-673-3
InChI
 • InChI=1S/C6H10O4/c7-5(8)3-1-2-4-6(9)10/h1-4H2,(H,7,8)(H,9,10) Y
  Key: WNLRTRBMVRJNCN-UHFFFAOYSA-N Y
 • InChI=1/C6H10O4/c7-5(8)3-1-2-4-6(9)10/h1-4H2,(H,7,8)(H,9,10)
  Key: WNLRTRBMVRJNCN-UHFFFAOYAY
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG D08839 Y
பப்கெம் 196
 • O=C(O)CCCCC(=O)O
 • C(CCC(=O)O)CC(=O)O
UNII 76A0JE0FKJ Y
பண்புகள்
C6H10O4
வாய்ப்பாட்டு எடை 146.14 g·mol−1
தோற்றம் வெண் படிகம் (முப்பரிமாணம்)[1]
அடர்த்தி 1.36 கி/செமீ3
உருகுநிலை 152.1 °C (305.8 °F; 425.2 K)
கொதிநிலை 337.5 °C (639.5 °F; 610.6 K)
ஒரு சீராகக் கரையும்[2]
காடித்தன்மை எண் (pKa) 4.43, 5.41
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
ஈயூ வகைப்பாடு நமைச்சல் காரணி (Xi)
R-சொற்றொடர்கள் R36
தீப்பற்றும் வெப்பநிலை 196 °செ
Lethal dose or concentration (LD, LC):
3600 மிகி/கிகி (எலி)
தொடர்புடைய சேர்மங்கள்
டைகார்பாக்சிலிக் அமிலங்கள்
தொடர்புடையவை
குளுடாரிக் அமிலம்;
பிமெலிக் அமிலம்
தொடர்புடைய சேர்மங்கள் ஹெக்சனோயிக் அமிலம்;
அடிபிக் அமிலம் டைஹைட்ரசைட்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

அடிபிக் அமிலம் (Adipic acid) என்னும் இந்தக் கரிமச் சேர்மத்தின் வாய்பாடு: (CH2)4(COOH)2. தொழிலகங்களின் நோக்கில் அடிபிக் அமிலம் மிகவும் முக்கியமான டைகார்பாக்சிலிக் அமிலமாகும்: ஆண்டுதோறும், 2.5 பில்லியன் கிலோகிராம் அடிபிக் அமில வெண் படிகத் துகள்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை முக்கியமாக, நைலான் உற்பத்தியில் முன்னோடிகளாக உபயோகப்படுத்தப்படுகின்றன. மற்றபடி, அடிபிக் அமிலம் இயற்கையில் அரிதாகக் கிடைக்கிறது.[3]

தயாரிப்பு[தொகு]

வரலாற்று நோக்கில், அடிபிக் அமிலம் பல்வேறு கொழுப்புகளை உயிர்வளியேற்றம் அடையச் செய்வதன் மூலம் தயாரிக்கப்பட்டு வந்தது. அடிபிக் அமிலம், சைக்ளோஹெக்சனோல் மற்றும் சைக்ளோஹெக்சனோன் கலவையிலிருந்து ["KA எண்ணெய்"; K-கீட்டோன், A-ஆல்கஹால்) தற்போது தயாரிக்கப்படுகின்றது. "KA எண்ணெய்" பலபடி வழிமுறையில் நைட்ரிக் அமிலத்தால் உயிர்வளியேற்றம் செய்யப்படுவதால் அடிபிக் அமிலம் கிடைக்கிறது. வினையின் ஆரம்பக் கட்டத்தில் சைக்ளோஹெக்சனோல் கீட்டோனாக மாற்றப்படும்போது நைட்டிரஸ் அமிலம் வெளிபடுகிறது:

HOC6H11 + HNO3 → OC6H10 + HNO2 + H2O

இவ்விதம் நடைபெறும் பல்வேறு வினைகளில், சைக்ளோஹெக்சனோன் நைட்ரசோ (-N=O) சேர்மமாக மாற்றப்பட்டு, C-C பிணைப்பு பிளவுறும் நிலையை உருவாக்குகிறது:

HNO2 + HNO3 → NO+NO3- + H2O
OC6H10 + NO+ → OC6H9-2-NO + H+

இம்முறையில் குளுடாரிக் மற்றும் சக்சினிக் அமிலங்கள் பக்க விளை பொருட்களாகக் கிடைக்கின்றன.[3]

மேற்கோள்கள்[தொகு]

 1. http://onlinelibrary.wiley.com/doi/10.1002/recl.19410600805/abstract
 2. Gaivoronskii, A. N.; Granzhan, V. A. (2005), "Solubility of Adipic Acid in Organic Solvents and Water", Russian Journal of Applied Chemistry, 78 (3): 404–08, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/s11167-005-0305-0
 3. 3.0 3.1 Musser, M. T. (2005), "Adipic Acid", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a01+269
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிபிக்_அமிலம்&oldid=2744908" இலிருந்து மீள்விக்கப்பட்டது