உள்ளடக்கத்துக்குச் செல்

குல்சார் ஹவுஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமார் 1880களில் குல்சார் ஹவுஸ்

குல்சார் ஹவுஸ் (Gulzar Houz) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவின் ஐதராபாத்து நகரில் அமைந்துள்ள ஒரு வரலாற்று நீரூற்று ஆகும். இது சார்மினார் அருகே அமைந்துள்ளது. சார்மினார் மற்றும் மதீனா கட்டிடத்திற்கு இடையில் சாலையின் நடுவில் இந்த நீரூற்று உள்ளது.[1]

நிஜாம் காலத்தில் நகரின் பல பகுதிகளிலும் இதேபோன்ற நீரூற்றுகள் அப்போதைய பொறியியலாளர்களின் உதவியுடன் கட்டப்பட்டன. அலங்காரத்திற்காக, சாலையின் நடுவில் இதேபோன்ற நீரூற்றுகள் அமைக்கப்பட்டன. இதனால் அவை அழகாக தோற்றமளிக்கும் வகையில் தண்ணீருக்கு அடியில் அழகாக காணப்படுகின்றன. குல்சார் ஹவுஸ் நீரூற்று எட்டு அடுக்குகளுடன் கட்டப்பட்டது

சார் காமனின் நான்கு வளைவுகளுக்கிடையேயான பகுதி ஜில்லு கானா அல்லது காவலர் சதுக்கம் என்று அழைக்கப்படும் ஒரு பரந்த மைதானம் உள்ளது. இதன் மையத்தில் சார்-சு-கா-ஹவுஸ் (நான்கு கொத்தளங்களாலான கோட்டை) இருந்தது. இது பின்னர் "சுகா-ஹவுஸ்" என்றும் இப்போது குல்சார் ஹவுஸ் என்றும் அழைக்கப்பட்டது.

இது சுற்றியுள்ள நான்கு காமன்களிலிருந்து 350 அடி சமமாக கட்டப்பட்டது. ஆரம்பத்தில் அது 12 பக்கமாக இருந்தது, பின்னர் அது எண்கோணமாக மாறியது. இன்று அது கிட்டத்தட்ட வட்டமாக இருக்கிறது.[2] இது நிசாமின் வீரர்களின் தாகத்தைத் தணிக்க உருவாக்கப்பட்ட எண்கோண வடிவ நீர் தேக்கமாகும் [3] அந்த காலத்தில், இந்த நீரூற்றிலிருந்து நான்கு நீரோடைகள் பாய்ந்து, ஒவ்வொரு சாலைகளையும் இரண்டு பகுதிகளாகப் பிரித்தன.[4] சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு முகமது குலி குதுப் ஷாவின் கீழ் முதல் பிரதமரான மிர் மோமின் அஸ்டராபாதி இதைக் கட்டினார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Historic Landmarks of the Deccan. 1907.
  2. Venu, T. P. (4 July 2020). "Hyderabad: Famed Gulzar Houz springs back to life". www.thehansindia.com.
  3. "Glory of the gates". தி இந்து. 10 March 2004. Archived from the original on 1 February 2005. பார்க்கப்பட்ட நாள் 2011-09-18. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. "What is Gulzar Houz? Here are 6 Interesting Facts of Gulzar Houz". exploretelangana. 18 June 2015. பார்க்கப்பட்ட நாள் July 3, 2018.
  5. "Gulzar Houz gets a delayed facelift". Deccan Chronicle. 2 July 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்சார்_ஹவுஸ்&oldid=3741971" இலிருந்து மீள்விக்கப்பட்டது