சார் காமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சார்மினாரை பார்த்தபடி சார் காமன்

சார் காமன் (Char Kaman) (நான்கு வாயில்கள் என்று பொருள்) இந்திய மாநிலமான தெலங்காணாவின் ஐதராபாத்து நகரிலுள்ள நான்கு வரலாற்று கட்டமைப்புகளாகும். [1] இது சார்மினார் அருகே அமைந்துள்ளது. [2] சார்மினாரின் கட்டமைப்புகள் முடிந்தபின், அதன் வடக்கே சுமார் 60 அடி உயரமும் 30 அடி அகலமும் கொண்ட நான்கு உயரமான வளைவுகள் இந்திய-பாரசீக பாணியில் 1592இல் கட்டப்பட்டன. [3]

நான்கு வளைவுகளின் பெயர்கள் சார்மினார் காமன், மச்சிலி காமன், காளி காமன், ஷெர்-இ-பாட்டில்-கி-காமன்.[4] கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையால் ஒரு பாரம்பரிய கட்டமைப்பாக சார் காமன் அறிவிக்கப்பட்டுள்ளது. [5]

பராமரிப்பு[தொகு]

வரலாற்று பாரம்பரிய தளமான சார் காமன்களை மீட்டெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக ரூ. 87 லட்சத்தை ஐதராபாத்து பெருநகர வளர்ச்சிக் கழகம் ஒதுக்கியுள்ளது. இந்த வளைவுகளில் சிதைந்த வளைவுகள் அகற்றப்பட்டன. அருகிலுள்ள கடைகள் அப்புறப்படுதப்பட்டன. மேலும், செதுக்கப்பட்ட வளைவுகளில் பழுது மற்றும் வண்ணமயமாக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேற்கோள்கள்[தொகு]

ஆள்கூறுகள்: 17°21′44″N 78°28′29″E / 17.36222°N 78.47472°E / 17.36222; 78.47472

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்_காமன்&oldid=3315254" இருந்து மீள்விக்கப்பட்டது