கொத்தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொத்தளம்

கொத்தளம் என்பது, கோட்டை மதில்களில் இருந்து வெளித் துருந்திக் கொண்டிருக்கும் ஓர்அமைப்பு ஆகும். சுற்று மதில்களின் மூலைகளிலும், சில சமயங்களில் நேரான மதில் பகுதிகளிலும் கொத்தளங்களை அமைப்பது உண்டு. இவை கோட்டையைத் தாக்கும் எதிரிகள் மீது பதில் தாக்குதல் நடத்துவதற்கு வசதியான இடங்களாக அமைகின்றன. இவை கோட்டைச் சுவர்களிலிருந்து வெளியே தள்ளிக்கொண்டு இருப்பதனால், இவற்றில் இருந்து அருகில் உள்ள பிற கொத்தளங்களையும் இரு புறங்களிலும் அமையக்கூடிய கோட்டைச் சுவர்களையும் முழுமையாகப் பார்க்க முடிவதுடன் மேற்குறித்த பகுதிகளில் எதிரிகளின் நடமாட்டம் இருக்குமானால் அவர்களை நோக்கித் தாக்குதல் நடத்தவும் முடியும்.


பழைய காலத்தில் கொத்தளத்தில் இருந்து வில்லும் அம்பும், ஈட்டி முதலிய படைக்கலன்களைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர், கொத்தளங்களில் பீரங்கிகளைப் பொருத்தி வைத்திருந்தனர்.

படங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொத்தளம்&oldid=2923480" இருந்து மீள்விக்கப்பட்டது