குலிகோவோ யுத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
17ஆம் நூற்றாண்டு விளக்கம்

குலிகோவோ யுத்தம் (Battle of Kulikovo) என்பது மமை தலைமையிலான தங்க நாடோடிக் கூட்டத்தின் ராணுவத்திற்கும் மற்றும் மாஸ்கோவின் டிமிட்ரி தலைமையிலான பல்வேறு உருசிய சமஸ்தானங்களின் கூட்டமைப்புக்கும் இடையே நடந்த ஒரு யுத்தமாகும். இந்த யுத்தம் 1380 ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி தொன் ஆற்றுக்கு (தற்போதைய தூலா மாகாணம், உருசியா) அருகில் இருந்த குலிகோவோ என்ற இடத்தில் நடைபெற்றது. இந்த யுத்தத்தில் டிமிட்ரி வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்குப் பிறகு அவர் டான்ஸ்கோய், 'தொன் ஆற்றினுடைய' என்று அறியப்பட்டார்.

ருஸ் மீதான மங்கோலிய ஆதிக்கத்தை இந்த வெற்றியானது நீக்கவில்லை என்றபோதும் பல உருசிய வரலாற்று ஆசிரியர்கள் மங்கோலிய செல்வாக்கு குறையத் தொடங்கி மாஸ்கோவின் சக்தி அதிகரிக்க தொடங்கிய ஒரு திருப்புமுனையாக இந்த யுத்தத்தை கருதுகின்றனர். இந்த யுத்தத்தின் இறுதியாக மாஸ்கோ சுதந்திரமடைந்து நவீன உருசிய அரசு உருவாக்கப்பட்டது.[1]

தொடர்புடைய யுத்தம்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. Timofeychev, A. (2017-07-19). "The Battle of Kulikovo: When the Russian Nation Was Born". Russia Beyond the Headlines. 2020-01-29 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலிகோவோ_யுத்தம்&oldid=3609265" இருந்து மீள்விக்கப்பட்டது