உள்ளடக்கத்துக்குச் செல்

மமய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மமய் (Mamai) (1325? - 1380/1381) என்பவர் தங்க நாடோடி கூட்டத்தின் ஒரு சக்தி வாய்ந்த மங்கோலிய ராணுவ தளபதி ஆவார். ஒரு பொதுவான, தவறான புரிதலுக்கு மாறாக இவர் ஒரு கான் (மன்னர்) கிடையாது. ஆனால் பல கான்களை உருவாக்கியவர் ஆவார். 1360கள் முதல் 1370கள் வரை கிட்டத்தட்ட இரு தசாப்த காலத்திற்கு தங்க நாடோடி கூட்டத்தின் பகுதிகள் அல்லது ஒட்டு மொத்த நாட்டின் மீதும் ஆதிக்கம் செலுத்தினார். பெரும் பிரச்சனைகள் என்று அறியப்பட்ட வாரிசுரிமை போர்களின் போது மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தை நிலை நாட்ட இவரால் இயலாத போதும், பிறர் குறுகிய காலத்திலேயே வந்து விட்டு சென்ற அதே நேரத்தில், தசாப்தங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் உறுதியான தலைவராக மமய் தொடர்ந்து நீடித்தார். குலிகோவோ யுத்தத்தில் இவர் தோற்கடிக்கப்பட்ட நிகழ்வானது நாடோடி கூட்டத்தின் வீழ்ச்சியின் தொடக்கத்தையும், இவரது திடீர் வீழ்ச்சியையும் குறித்ததாக அமைந்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Vernadsky 1953: 246; Jackson 2005: 216.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மமய்&oldid=3781171" இலிருந்து மீள்விக்கப்பட்டது