குறைமாவு உணவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறைமாவு உணவு முறை என்பது சராசரி உணவிலுள்ள மாவுச்சத்தை விடக் குறைவான மாவுச்சத்தைப் பரிந்துரைக்கும் உணவுமுறையாகும். இம்முறையில் மாவுச்சத்து மிகுந்த ரொட்டி, சர்க்கரை, பாஸ்த்தா போன்றவற்றின் அளவு கட்டுப்படுத்தப்பட்டு அதற்கு ஈடாக கொழுப்புச்சத்தும் புரதமும் உள்ள உணவுகளும் (இறைச்சி, மீன், முட்டை, பாலாடைக்கட்டி, விதைகள் போன்றன) நார்ச்சத்து மிகுந்தும் மாவுச்சத்து மிகக்குறைந்தும் உள்ள கீரை, காய்கறிகள் அதிகம் சேர்த்ததுக்கொள்ளப்பட வேண்டும்.

எந்த அளவு மாவுச்சத்து உள்ள உணவு குறைமாவு உணவு என்பதற்குச் சரியான வரையறை இல்லை எனினும் அமெரிக்க நிறுவனம் ஒன்று உணவில் 20%க்கும் கீழே மாவுச்சத்து இருப்பின் அது குறைமாவு உணவு என்று கூறுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Low-carbohydrate diets". American Family Physician 73 (11): 1942–8. June 2006. பப்மெட்:16770923. http://www.aafp.org/link_out?pmid=16770923. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறைமாவு_உணவு&oldid=3697807" இலிருந்து மீள்விக்கப்பட்டது