உள்ளடக்கத்துக்குச் செல்

குறைந்த ஆபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறைந்த ஆபத்து (Lower risk) என்பது விலங்குகளின் தர நிலையினை குறிக்கும் அளவீடு ஆகும்.[1] பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் விலங்குகளின் எண்ணிக்கை மற்றும் அழிவின் அபாயத்தை வரையறுக்கும் பல தரவரிசைகளைக் கொண்டுள்ளது. சிற்றினங்கள் ஒன்பது தரவரிசையில் செம்பட்டியலில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை அற்றுவிட்ட இனம், இயலிடத்தில் அற்றுவிட்ட இனம், மிக அருகிய இனம், அருகிய இனம், அழிவாய்ப்பு இனம், அச்சுறு நிலை அண்மித்த இனம், தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம், தரவுகள் போதாது மற்றும் மதிப்பீடு செய்யப்படாத இனம் என்பன.[2] சில விலங்குகளை விவரிக்க இவர்கள் முன்பு "குறைந்த ஆபத்து" என்ற அடையாளத்தைப் பயன்படுத்தினர்.

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம், ஒரு விலங்கினை, குறைந்த ஆபத்து கொண்ட ஒரு விலங்கு என்று அதன் உயிர்வாழ்வை உறுதிசெய்யும் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் உள்ள நிலையினைக் குறிக்கிறது.[3] இந்த நிலையில் உள்ள விலங்குகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகவோ அல்லது அழிந்துவிட்டதாகவோ தகுதி பெறாது. இருப்பினும், இயற்கை பேரழிவுகள் அல்லது சில மனித நடவடிக்கைகள் இந்த வகைப்பாடுகளில் ஏதேனும் ஒன்றை மாற்றுவதற்குக் காரணமாக அமையலாம்.

இது பயன்பாட்டிலிருந்தபோது, இந்த வகைப்பாடு மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டது:

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Raw Data to Red List". IUCN Red List of Threatened Species. Archived from the original on June 23, 2023. பார்க்கப்பட்ட நாள் June 23, 2023.
  2. "IUCN Red List of Threatened Species". www.iucn.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-26.
  3. "lower risk species (IUCN)". www.eionet.europa.eu. பார்க்கப்பட்ட நாள் 2023-05-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறைந்த_ஆபத்து&oldid=3825196" இலிருந்து மீள்விக்கப்பட்டது