உள்ளடக்கத்துக்குச் செல்

குறும்பாலக்கோட்டை

ஆள்கூறுகள்: 11°41′46″N 76°02′01″E / 11.696146°N 76.033550°E / 11.696146; 76.033550
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறும்பாலக்கோட்டை (மலையாளம் : കുറുമ്പാലക്കോട്ട; ஆங்கிலம்: Kurumbalakotta) என்பது கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள கல்பற்றாவிற்கு மேற்கே 20 கிமீ தொலைவில் உள்ள ஒரு மலையாகும். கேரளாவில் உள்ள ஒரு ஒற்றைப்பாறை மலை இதுவாகும்.[1] இது கடல் மட்டத்திற்கு மேல் 991 மீ (3251.31234 அடி) உயரமுடையது. இது வயநாட்டின் மையத்திலும், தக்காணப் பீடபூமியின் ஒரு பகுதியிலும், மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் சங்கமத்திலும் அமைந்துள்ளது. மலை உச்சியிலிருந்து வயநாடு பீடபூமியின் முழு காட்சியையும் காணலாம். இந்த மலையைச் சுற்றியுள்ள மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் மூடுபனியால் சூழப்பட்டுக் காணப்படுவதால் மலையேறுபவர்களுக்கு இனிமையான சூழ்நிலையை அளிக்கிறது.[2]

இந்த மலையானது வயநாடு மாவட்டத்தில் உள்ள வைத்திரி வட்டத்தில் உள்ள கொட்டத்தாரா ஊராட்சியில் அமைந்துள்ளது. வெண்ணியோடு இதன் அருகில் உள்ள சிறிய நகரம் ஆகும். சுற்றுலாப் பயணிகள் கல்பெட்டாவிலிருந்து கம்பளக்காடு சந்திப்பு வழியாகச் சாலை மார்க்கமாக செல்லலாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kurumbalakotta Tourism (2022) - India > Top Places, Travel Guide". www.holidify.com. பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
  2. മുസ്തഫ, അഫീഫ്. "വയനാട്ടിലെ മീശപ്പുലിമല, കുറുമ്പാലക്കോട്ട!!". Mathrubhumi (in ஆங்கிலம்). Archived from the original on 2022-02-13. பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.


"https://ta.wikipedia.org/w/index.php?title=குறும்பாலக்கோட்டை&oldid=3621721" இலிருந்து மீள்விக்கப்பட்டது