குறுஞ்செய்திச் சேவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குறுஞ் செய்திகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குறுஞ்செய்திச் சேவை (Short Message Service) பொதுவாக நகர்பேசிகளூடாக அனுப்பபடும் குறுகிய செய்திகளாகும். இவை நகர்பேசிகள் மாத்திரம் அன்றி சில நிலையான தொலைபேசிகளிலும் பயன்படுகின்றது.

தமிழில் குறுஞ்செய்திகள்[தொகு]

தமிழில் யுனிக்கோட் முறையில் குறுஞ்செய்திகள் அனுப்பும் முறை செல்லினம் மென்பொருளூடாகத் தமிழர்களின் தைப்பொங்கற் தினமான 15 ஜனவரி 2005 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது தவிர இலங்கையில் சண்ரெல் மடிக்கணினிகளில் பாவிக்கப் படும் PCMCIA CDMA தொலைபேசிகளில் தமிழை எ-கலப்பை போன்ற மென்பொருட்களூடாக நேரடியாகத் தட்டச்சுச் செய்து அனுப்பமுடியும். Nokia PC Suite மென்பொருட்களும் இவ்வாறே நேரடியாகத் தமிழில் செய்திகளைத் தயாரிக்க உதவுகின்றன எனினும் பெறுபவர்களின் நகர்பேசியில் ஒருங்குறி வசதியிருக்கவேண்டும்.

வரலாறு[தொகு]

உலகின் முதல் குறுஞ்செய்தியானது 1992 திசம்பர் 3 அன்று கணிணியில் இருந்து அனுப்பப்பட்டது. அப்போது வோடபோன் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த பிரிட்டனைச் சேர்ந்த நீல் பாப்வொர்த் என்பவர் தன்னுடைய சக பொறியாளரான ரிச்சர்டு ஜார்விஸுக்கு உலகின் முதல் குறுச்செய்தியை, ‘மெரி கிறிஸ்துமஸ்’ எனும் இரண்டு சொற்களுடன் கிறித்துமசு வாழ்தாக அனுப்பினார். ஜார்விஸ் வைத்திருந்த ஆர்பிட் நகர்பேசியில் அதைப் பெற்றுக்கொண்டார். அப்போது நகர்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பும் அந்த வசதி இல்லை, குறுஞ்செய்திகளை பெறமட்டுமே முடிந்தது.

நகர்பேசி வலைப்பின்னல் வழியே செய்திகளை அனுப்பிவைப்பதற்கான கருத்தாக்கத்தை 1984 இல் முதன்முதலில் முன்வைத்தவர் பின்லாந்தைச் சேர்ந்த பொறியாளரான மேட்டி மக்கோனென் என்பவர். ஆனால் அவர் அளித்த ஒரு பேட்டியில் இது ஒரு கூட்டுக் கண்டுபிடிப்பு என்றார். குறுஞ்செய்திகளில் 160 எழுத்துகள் எனும் கட்டுப்பாட்டை முதலில் முன்வைத்தவர்கள் ஜெர்மனி பொறியாளர்களான பிரிதெல்ம் ஹில்லேபிராண்ட் மற்றும் பெர்னார்டு ஹிலேபார்ட் ஆவர்.

1993 இல் நோக்கியா நிறுவனம் நகர்பேசியில் குறுஞ்செயதி அனுப்பி பெறும் வசதியை அறிமுகம் செய்தது. அதன் பிறகு குறுஞ்செய்தி பிரபலமானது. 1999 இல் தான் பல்வேறு நகர்பேசி சேவைகளுக்கு இடையே குறுஞ்செய்தி அனுப்பும் வசதி அறிமுகமாகி இந்த சேவை பரவலானது.[1]

இணையமூடான குறுஞ்செய்திச் சேவைகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. சைபர்சிம்மன் (8 திசம்பர் 2017). "எஸ்.எம்.எஸ். 25 - எப்போதும் ராஜா!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 8 திசம்பர் 2017.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுஞ்செய்திச்_சேவை&oldid=3845828" இலிருந்து மீள்விக்கப்பட்டது