உள்ளடக்கத்துக்குச் செல்

குர்மீத்து கவுர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குர்மீத்து கவுர் ராய் (Gurmeet Kaur Rai) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள வீராங்கனையாவார். 1970 ஆம் ஆண்டு சூன் மாதம் 20 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்தியாவின் சார்பாக ஈட்டி எறிதல் விளையாட்டில் இவர் பங்கேற்று ஓய்வு பெற்றுள்ளார். 17 ஜூலை 2000 ஆம் ஆண்டு சூலை மாதம் 17 ஆம் தேதியன்று பெங்களூரில் நடந்த ஒரு போட்டியில் 58.64 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து இவர் தனது தனிப்பட்ட சிறந்த சாதனையைப் படைத்தார். இது 2014 ஆம் ஆண்டு வரை தேசிய சாதனையாக இருந்தது. இச்சாதனை அன்னு ராணியால் முறியடிக்கப்பட்டது. [1]

பன்னாட்டுப் போட்டிகள்

[தொகு]
ஆண்டு போட்டி இடம் நிலை குறிப்புகள்
 இந்தியா சார்பாக
1998 1998 ஆசிய வெற்றியாளர் போட்டிகள் புகுவோகா, சப்பான் 3ஆவது 55.35 மீட்டர்
1998 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பேங்காக்கு, தாய்லாந்து 3ஆவது 59.00 மீட்டர்
1999 1999 உலக வெற்றியாளர் போட்டி செவில்லே, எசுப்பானியா 26ஆவது 51.97 மீட்டர்
2000 2000 ஆசிய வெற்றியாளர் போட்டிகள் இயாகர்த்தா, இந்தோனேசியா 2 ஆவது 55.65 மீட்டர்
2000 கோடைக்கால ஒலிம்பிக்கு போட்டிகள் சிட்னி, ஆத்திரேலியா 32 ஆவது 52.78 மீட்டர்
2003 2003 ஆப்ரோ-ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஐதராபாத்து, இந்தியா 2 ஆவது 53.37 மீட்டர்
2004 2004 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் இசுலாமாபாத்து, பாக்கித்தான் 2 ஆவது 51.27 மீட்டர்
2006 2006 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் கொழும்பு, இலங்கை 3ஆவது 46.45 மீட்டர்

தொழில்

[தொகு]

குர்மீத் கவுர் பன்னாட்டு அளவில் ஈட்டி எறிதல் போட்டிகளில் இந்திய நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், 2000 ஆண்டு நடைபெற்ற சிட்னி ஒலிம்பிக்கில் இந்தியக் குழுவிலிவர் ஓர் உறுப்பினராக இருந்தார். கணவரின் சோகமான ஆரம்பகால மரணம் காரணமாக 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கு போட்டியில் இவரால் பங்கேற்க முடியவில்லை. இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தார். இந்நிறுவனத்தில் புது தில்லி கிளையில் உதவி நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார்[2] .

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Annu Rani rewrites javelin record". The Hindu. 7 June 2014. http://www.thehindu.com/sport/other-sports/annu-rani-rewrites-javelin-record/article6093006.ece. பார்த்த நாள்: 23 July 2014. 
  2. "Age cannot deter Gurmeet". Hindustan Times (in ஆங்கிலம்). 2007-01-10. பார்க்கப்பட்ட நாள் 2019-07-27.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்மீத்து_கவுர்&oldid=3844917" இலிருந்து மீள்விக்கப்பட்டது