குரோவ்
Kurów | |
---|---|
Village | |
ஆள்கூறுகள்: 51°23′23″N 22°11′10″E / 51.38972°N 22.18611°E | |
நாடு | போலந்து |
மாகாணம் | லுப்லின் |
கவுண்டி | புலாவி |
மாநகரசபை | குரோவ் |
உருவாக்கம் | ~ 12-ஆம் நூற்றாண்டு |
நகர உரிமை | 1442–1870 |
பரப்பளவு | |
• மொத்தம் | 11.33 km2 (4.37 sq mi) |
ஏற்றம் | 157 m (515 ft) |
மக்கள்தொகை (31.12.2018) | |
• மொத்தம் | 2,725 |
• அடர்த்தி | 241/km2 (620/sq mi) |
நேர வலயம் | ஒசநே+1 (ம.ஐ.நே) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (ம.ஐ.கோ.நே) |
அஞ்சல் | 24-170 |
இடக் குறியீடு | +48 81 |
வாகனக் குறியீடு | LPU |
குரோவ் (Kurów; ([ˈகுரூஃப்] (ⓘ))) தென் கிழக்கு போலந்தில் அமைந்துள்ள ஒரு கிராமம். 2,811 (2005 ஆம் ஆண்டில்) மக்கள் இங்கு வாழ்கின்றனர்.
வரலாறு
[தொகு]1431-1442 காலப்பகுதியில் இக்கிராமத்துக்கு நகரத்துக்கான உரிமை வழங்கப்பட்டது. அயல் நகரங்களில் இருந்து உணவு வணிகம் நடைபெறும் முக்கிய நகராக இருந்து வந்தது. பல தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இந்நகரத்தில் அமைந்திருந்தன. 16ஆம் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவ மத போதனைகளில் ஒன்றான கால்வினிசம் இங்கு பரவியிருந்தது. 1660களில் இக்கிராமத்தின் பலரும் ஆரியனிசத்தைப் ([1]) பின்பற்றினர்.
1795-இல் இந்நகரம் ஆஸ்திரியாவுடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1815-இல் போலந்துடன் இணைக்கப்பட்டது. 1831 பெப்ரவரியில் இங்கு இடம்பெற்ற கிளர்ச்சியின் போது, யோசப் துவெர்னிக்கி தலைமையிலான போலந்துப் படையினர் உருசியர்களைத் தோற்கடித்தனர். 1870-இல் இந்நகரம் தனது நகர அந்தஸ்தை இழந்தது. இன்றும் அந்த அந்தஸ்தை மீளப் பெற முடியவில்லை.
1939 செப்டம்பர் 9 இல் இரண்டாம் உலகப் போர் ஆரம்பத்தில் இந்நகரம் செருமனியரின் பெரும் தாக்குதலுக்கு உள்ளானது. மருத்துவமனை மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சில் பலர் கொல்லப்பட்டனர்.
போலந்தின் முன்னாள் கம்யூனிசத் தலைவரும் அதிபருமான யாருசெல்ஸ்கி இக்கிராமத்தில் பிறந்தவர்.