உள்ளடக்கத்துக்குச் செல்

குயிரினோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குயிரினோ
மாகாணம்
மாகாணத் தலைமையகம்
மாகாணத் தலைமையகம்
நாடுபிலிப்பீன்சு
பிராந்தியம்ககயன் பள்ளத்தாக்கு
நேர வலயம்ஒசநே+8 (பிசீநே)
அதிகாரப்பூர்வ இணையதளம்

குயிரினோ (Quirino) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், ககயன் பள்ளத்தாக்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் கபரோகுயிஸ் ஆகும். இது 1966 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இம்மாகாணத்தில் 132 கிராமங்களும், 6 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் ஜுனி எல். குவா (Junie E. Cua) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 2,323.47 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக குயிரினோ மாகாணத்தின் சனத்தொகை 188,991 ஆகும்.[2] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 54ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 73ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் இலோகானோ, தகலாகு, ஆங்கிலம் உள்ளடங்கலாக ஏழு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "List of Provinces". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. Archived from the original on 11 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  2. "Population of the provine". Archived from the original on 2011-07-09. பார்க்கப்பட்ட நாள் 2017-01-10.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குயிரினோ&oldid=3929053" இலிருந்து மீள்விக்கப்பட்டது