உள்ளடக்கத்துக்குச் செல்

கும்பம் கைவினைப் பொருள் கிராமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கும்பம் கைவினைப் பொருள் கிராமம் (Kumbham Handicrafts Village) என்பது தென்னிந்திய மாநிலமான, கேரளத்தின், மலப்புறம் மாவட்டம், அருவங்காட்டில் அமைந்துள்ள கிராமமாகும். இது கைவினைப் பொருட்களுக்கு புகழ்பெற்றது. இது உதகமண்டலம் - கோழிக்கோடு செல்லும் வழியில் உள்ளது.

இங்கு வசிக்கும் கும்பரான் (குயவர்) இனத்தவர் மண்பாண்டக்கலைக்கு சொந்தக்காரர்களாவர். கால ஓட்டத்ததில் நவீன பண்ட பாத்திரங்களின் வரவால் தங்கள் சந்தையை இழந்தனர். தொழிலை இழந்த இவர்கள் வறுமைக்கு ஆட்பட்டு தவறான பாதைகளில் செல்லத் துவங்கினர். இதைக்கண்டு வருந்திய கேபிஜின்ன் என்ற சமூக ஆர்வலர் இந்த கிரம மக்களின் தொழிலை நவீனமயமாக்கி, மட்பாண்ட கலைப்பொருட்களாக இருக்கைகள், சுவர் அலங்காரப் பொருட்கள், ஓடுகள், தட்டுமுட்டு பொருட்கள் என்று வரை 500 க்கும் மேற்பட்ட பிரத்யேக வடிவமைப்புகளைக் கொண்டுள்ளதாக மாறி, நட்சத்திர விடுதிகளில் விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தார். தற்போது 80 க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் கும்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.[1]

குறிப்புகள்

[தொகு]