குமாரி ருக்மணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குமாரி ருக்மிணி
1940களில் குமாரி ருக்மணி
பிறப்பு(1929-04-19)19 ஏப்ரல் 1929
இறப்புசெப்டம்பர் 4, 2007(2007-09-04) (அகவை 78)
சென்னை
தேசியம்இந்தியன்
பணிநடிகை
அறியப்படுவதுஇந்திய திரைப்பட நடிகை
பெற்றோர்நுங்கம்பாக்கம் ஜானகி
வாழ்க்கைத்
துணை
ஒய். வி. ராவ்
பிள்ளைகள்லட்சுமி
உறவினர்கள்ஐஸ்வர்யா (பேர்த்தி)

குமாரி ருக்மணி (ஏப்ரல் 19, 1929[1] - செப்டம்பர் 4, 2007)[2] என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகையாவார்.

குடும்பம்[தொகு]

ருக்மணி தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் மெலட்டூரை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் நடிகை நுங்கம்பாக்கம் ஜானகியின் மகளும், நடிகை லட்சுமியின் தாயாரும், நடிகை ஐஸ்வர்யாவின் பாட்டியும் ஆவார். இவரது கணவர் பெயர் ஒய். வி. ராவ். பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர்.

திரைப்பட நடிகையாதல்[தொகு]

ஸ்ரீ வள்ளி திரைப்படத்தில் குமாரி ருக்மிணி

மும்பையில் ஹரிச்சந்திரா திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவந்த வேளையில். லோகிதாசன் வேடத்துக்குப் பொருத்தமான சிறுவன் கிடைக்கவில்லை. அப்போது டி. பி. ராஜலட்சுமி தங்கியிருந்த விடுதியின் பக்கத்து அறையில் தங்கி இருந்தவரின் அழகான பெண் குழந்தையைக் கண்டு அக்குழந்தையின் பெற்றோரிடம் பேசி திரைப்படத்தில் லோகிதாசனாக நடிக்கவைத்தனர். இந்த ஹரிச்சந்திரா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் குமாரி ருக்மணி. குமாரி ருக்மணிக்கு டி.பி. ராஜலட்சுமியுடன் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘ஜலஜா’ என்னும் படம் வழியாக இந்தித் திரைப்படத்திலும் அறிமுகமானார். அம்மா ஜானகியும் ருக்மணியும் சேர்ந்து ‘பாக்யலீலா’ படத்தில் நடித்தார்கள்.[3]

நடித்த பிற திரைப்படங்கள்[தொகு]

 • டி. ஆர். மகாலிங்கத்துக்கு இணையாக பூலோக ரம்பை, ஸ்ரீ வள்ளி போன்ற திரைப்படங்களில் நடித்தார்.[4]
 • 1946 இல் வெளியான லவங்கி திரைப்படம். இந்தப் படத்தில் நாயகனாக நடித்த இயக்குநர் ஒய். வி. ராவுடன் குமாரி ருக்மணிக்கு காதல் திருமணம் நடந்தது.
 • 1947 இல் வெளியான பங்கஜவல்லி திரைப்படத்தில் கிருஷ்ணனாக ஆண் வேடத்தில் நடித்தார்.[5]
 • ஸ்ரீராம் ஜோடியாக நடித்த முல்லைவனம் திரைப்படம், குமாரி ருக்மணி கதாநாயகியாக நடித்த கடைசிப் படம்.
 • கப்பலோட்டிய தமிழன் படத்தில் சிவாஜி கணேசனின் மனைவியாக நடித்தார் ருக்மணி.
 • 1961 தொடங்கி 1975 வரையில் பல திரைப்படங்களில் அன்னை வேடங்களில் நடித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

 1. "நட்சத்திரம் பிறந்தநாள்". குண்டூசி: பக். 34-35. ஏப்ரல் 1951. 
 2. "Yesteryear actor Rukmani dies" (in ஆங்கிலம்). தி இந்து. 05 செப்டம்பர் 2007 இம் மூலத்தில் இருந்து 19 நவம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161119052200/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/yesteryear-actor-rukmani-dies/article1905463.ece. பார்த்த நாள்: 19 நவம்பர் 2016. 
 3. "சூப்பர் ஸ்டார்களின் கதாநாயகி!". தி இந்து (தமிழ்). 12 செப்டம்பர் 2015. http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF/article7645448.ece. பார்த்த நாள்: 13 மே 2016. 
 4. "நடிகை குமாரி ருக்மணி திரைப்படங்கள் பட்டியல்". spicyonion.com/tamil. http://spicyonion.com/tamil/actress/kumari-rukmani-movies-list/. பார்த்த நாள்: 14 மே 2016. 
 5. ராண்டார் கை (2013-07-27). "Blast from the Past - Pankajavalli 1947". "தி இந்து" இம் மூலத்தில் இருந்து 5-11-2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161105042228/http://www.thehindu.com/features/cinema/cinema-columns/pankajavalli-1947/article4959796.ece. பார்த்த நாள்: 2016-01-24. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமாரி_ருக்மணி&oldid=3682730" இருந்து மீள்விக்கப்பட்டது