குமரன் ஆசான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
என். குமரன் ஆசான்
பிறப்பு {{{birthname}}}
1873
காயிக்கர, திருவனந்தபுரம்
இறப்பு 1924
பல்லன
தொழில் கவிஞர், மெய்யியலாளர்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
வீணா பூவு

என். குமரன் ஆசான் (1873 - 1924) என்பவர் மகாகவி குமரன் ஆசான்என்றும் அறியப்படும் கவிஞராவார். இவருக்கு மகாகவி என்ற பட்டம் 1922 ஆம் ஆண்டு மதராசு பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது. “மகாகவி” என்றால் “பெரும் கவிஞர்" என்ற பொருளும் “ஆசான்” என்றால் “ஆசிரியர்” என்ற பொருளும் கொண்டவை. கேராளாவில் திருவனந்தபுரம் அருகிலுள்ள காயிக்கர எனுமிடத்தில் ஈழவர் சமுதாயத்தில் பிறந்த இவர், இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் மலையாள நவீன கவியுலகின் மும்மூர்த்திகள் எனப் போற்றப்படும் மூவரில் ஒருவர். மற்றவர்கள் உள்ளூர் பரமேசுவர அய்யர் மற்றும் வள்ளத்தோல் நாராயண மேனன் ஆவர். ஸ்ரீ நாராயணகுருவின் முதன்மைச் சீடரான இவர் ஓர் மெய்யியலாளரும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இவரது பாடல்களில் மெய்யியலும் ஆன்மீகமும் அதிகம் இடம் பெற்றிருக்கும்.

குமரன் ஆசானின் கையெழுத்து
"http://ta.wikipedia.org/w/index.php?title=குமரன்_ஆசான்&oldid=1353786" இருந்து மீள்விக்கப்பட்டது