நளினி (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நளினி என்னும் காவியத்தை குமரனாசான் எழுதினார். இது மலையாளத்தில் எழுதப்பட்ட முக்கியமான நூல்களில் ஒன்று. 1911-இல் வெளியானது. பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையிலான அசாதாரணமான காதலைப் பற்றிய கதை. இந்த கதையின் நாயகியின் பெயரே நூலின் தலைப்பானது.

இது 173 சுலோகங்களைக் கொண்டது. ஒவ்வொரு சுலோகங்களும் நான்கு வரிகளைக் கொண்டவை. இதில் 166 சுலோகங்கள் ’ரதோத்தத’ விருத்த வகையில் அமைந்துள்ளன. ’மாலினி’ என்னும் வகையில் மூன்றும், ’வசந்ததிலகம்’ என்னும் வகையில் இரண்டும் ’பிருத்வி’, ’மந்தாக்ராந்த’ ஆகிய வகைகளில் தலா ஒன்றும் உள்ளன.

கதை[தொகு]

திவாகரன் நளினியின் விளையாட்டுத் தோழன். திவாகரன் இளவயதில் சொந்த நாட்டை விட்டு வேற்று நாட்டுக்கு செல்கிறான். அவனை மனதில் நினைத்து வாழ்கிறாள். மண வயதில் மகளுக்கு திருமணம் செய்விக்க தீர்மானிக்கின்றனர் நளினியின் பெற்றோர். தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது அறிந்த நளினி, தோழிகளோடு ஆலோசிக்காது, வீட்டைவிட்டு வெளியேறுகிறாள். நீரில் குதித்த அவளை ஒரு முனிவர் காப்பாற்றுகிறார். அந்த முனிவரின் ஆசிரமத்தில் ஐந்தாண்டுகள் தங்கியிருக்கிறாள். அப்போது ஒரு காலை வேளையில், திவாகரனை பார்க்கிறாள். யோகியான அவன் அவளை வாழ்த்தி பயணப்பட முயல்கிறான். அவன் வருந்தவே, அவளுக்கு உபதேசிக்கிறான்.

சில பாடல்கள்[தொகு]

முதலாம் பாடல்;

பொருள்: பல காலங்களுக்கு முன்பு, சீரான காலை வேளையில், இமயமலைக்கு அருகில் உள்ள பள்ளத்தாக்கில் இளைய முனிவன் ஒருவன் வந்திறங்கினான். அவனிடம் பள்ளத்தாக்கின் அமைதியும், சூரியனின் ஒளியும் நிறைந்திருந்தன.

இரண்டாம் பாடல்:

பொருள்: சுருட்டையான நீண்ட முடியும், நீண்ட நகங்களும், அவன் நீண்ட நாளாக தவம் இருந்தவன் என்பதை உணர்த்தின. குறைந்த உடையணிந்த அவன் உடலைப் பார்த்தால், குளிர், வெப்பம் எதனாலும் தாக்கப்படாததைப் போல் இருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நளினி_(நூல்)&oldid=2648765" இருந்து மீள்விக்கப்பட்டது