உள்ளடக்கத்துக்குச் செல்

குமரன் ஆசான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குமரன் ஆசான்
பிறப்புஎன். குமாரன் ஆசான்
1873
காயிக்கரை, திருவனந்தபுரம்
இறப்பு1924
பல்லனை
தொழில்கவிஞர், மெய்யியலாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்வீணப் பூவு

என். குமாரன் ஆசான் (1873 - 1924) என்பவர் மகாகவி குமாரன் ஆசான் என்றும் அறியப்படும் கவிஞராவார். இவருக்கு மகாகவி என்ற பட்டம் 1922 ஆம் ஆண்டு மதராசு பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது. “மகாகவி” என்றால் “பெரும் கவிஞர்" என்ற பொருளும் “ஆசான்” என்றால் “ஆசிரியர்” என்ற பொருளும் கொண்டவை. கேரளாவில் திருவனந்தபுரம் அருகிலுள்ள காயிக்கரை எனுமிடத்தில் ஈழவர் சமுதாயத்தில் பிறந்த இவர், இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் மலையாள நவீன கவியுலகின் மும்மூர்த்திகள் எனப் போற்றப்படும் மூவரில் ஒருவர். மற்றவர்கள் உள்ளூர் பரமேசுவர அய்யர் மற்றும் வள்ளத்தோள் நாராயண மேனன் ஆவர். ஸ்ரீ நாராயணகுருவின் முதன்மைச் சீடரான இவர் ஓர் மெய்யியலாளரும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இவரது பாடல்களில் மெய்யியலும் ஆன்மீகமும் அதிகம் இடம் பெற்றிருக்கும்.

தாக்கங்கள்

[தொகு]

ஸ்ரீ நாராயணகுரு

இளமைப் பருவம்

[தொகு]

இவர் 1873 ஏப்ரல் 12ஆம் நாளில் பிறந்தார். இவர் பிறந்த ஊர் சிறையின்கீழ்‌]] வட்டத்தில் உள்ள காயிக்கரை ஆகும். இவரது தந்தையான நாராயணன் பெருங்ஙாடி, மலையாளத்திலும் தமிழிலும் வல்லவராகத் திகழ்ந்தவர். இவரது அம்மாவின் பெயர் காளியம்மை ஆகும். ஒன்பது மக்களைப் பெற்ற குடும்பத்தில் இரண்டாவது மகனாய் பிறந்தவர். இவருக்கு ஏழு வயதாக இருந்தபோது பள்ளியில் சேர்த்தனர். இவரது ஆசிரியரின் பெயர் ”துண்டத்தில் பெருமாளாசான்” ஆகும். பின்னர், சமசுகிருதப் பாடங்களை படித்தார். பின்னர், வேறொரு பள்ளியில் பயின்றார். அதே பள்ளியில் ஆசிரியராகவும் சேர்ந்தார். பின்னர், ஆங்கிலமும் கற்றார். சில காலம், கடைகளில் கணக்கெழுதிக் கொண்டிருந்தார். அப்போது, கவிதைகள் எழுதத் தொடங்கினார். பரவூரில் கேசவனாசான் என்பவர் நடத்திய சுஜனாநந்தினி என்ற இதழில் இவரது கவிதைகள் வெளியாயின. குமாரு, என். குமாரன், காயிக்கரை என். குமாரன் என்ற பெயர்களில் கவிதைகளை எழுதியிருந்தார்.

இவரது அறிவுத் திறனை உணர்ந்த இவரது முதலாளியான ”கொச்சார்யன் வைத்யன்”, இவரை மேலும் கல்வி கற்குமாறு தூண்டினார். மணம்பூர் கோவிந்தனாசான் என்ற பெரிய புலவரிடம் கல்வி கற்றார். பாட்டுகளும் சுலோகங்களும் எழுதுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். அங்கு படித்தபோது, “வள்ளி விவாகம்”, “அம்மானைப்பாட்டு“, “உஷாகல்யாணம்“ ஆகியவற்றை எழுதினார். “சுப்ரமண்ய சதகம்” என்ற நூலையும் எழுதினார். இது அச்சுப்பதிப்பாகவும் வெளிவந்துள்ளது.

குமரன் ஆசானின் கையெழுத்து

நூல்கள்

[தொகு]

வீண பூவ்

[தொகு]

தமிழில் ”வீழ்ந்த” என்ற சொல் மலையாளத்தில் “வீண” எனத் திரியும்.

விழுந்த => வீழ்ந்த=> வீழ்ந்ந => வீண

இவர் எழுதிய வீண பூவ் என்ற கவிதை, 1907 டிசம்பரில் மிதவாதி என்ற இதழில் வெளியானது. வீணப் பூவ் என்றால் விழுந்த பூ என்று பொருள்.

என்று தொடங்குகிறது. பூ பூக்கத் தொடங்கியது முதல் வாடுவது வரையுள்ள காலகட்டத்துடன், மனிதனின் வாழ்க்கையை ஒப்பிட்டு எழுதியுள்ளார். இது நாற்பத்தியொன்று சுலோகங்களைக் கொண்டுள்ளது. அப்போதைய பிரபல இலக்கிய இதழான பாஷாபோஷிணியிலும் வெளியானது.

நளினி

[தொகு]

இது நளினிக்கும் திவாகரனுக்கும் இருந்த அசாதாரண நட்புறவைப் பற்றியது.

துரவஸ்த

[தொகு]

துர்+அவஸ்தை=துரவஸ்தை. காலங்காலமாக சமூகத்தில் இருந்த கெட்ட ஆசாராங்களால் உண்டான தீங்குகளைப் பற்றியது.

சான்றுகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமரன்_ஆசான்&oldid=3125947" இலிருந்து மீள்விக்கப்பட்டது