குன்டாலா அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குன்டாலா அருவி
Kuntala-waterfalls1.jpg
Kuntala-waterfalls
அமைவிடம்குன்டலா, அடிலாபாட் மாவட்டம், தெலுங்கானா

வகைஅருவிமொத்த உயரம்147 feetகுன்டாலா அருவி, தெலுங்கானா மாநிலம், அடிலாபாட் மாவட்டம்  குன்டாலாவில் அமைந்துள்ளது. நரிடிகொன்டா மண்டலம் காதிம் நதியில் அமைந்துள்ளது இவ்வருவி. 147அடி உயரம் கொன்ட இவ்வருவி, தெலுங்கானா மாநிலத்தின் உள்ள மிக உயர்ந்த அருவி.

இவ்வருவி, கோன்டுகள் வாழும் அடர்ந்த காடுகளின் உள்ளே அமைந்துள்ளது. கோன்டி மற்றும் தெலுங்கில் குன்டா என்றால் குளம் என்று பொருள். குன்டலு என்றால் குளங்கள் என்று பொருள். பல குளங்களின் நீர், ஆறாக மாறி பின்னர் அருவியாக விழுகிறது.

காதிம் நதியின் மூலம் உருவாகிய குன்டாலா அருவி இரண்டு அடுக்காக விழுகிறடது. மேலும், உச்சபட்ச மழையின் போது இரண்டு தனித்தனி அருவிகளாக விழுகிறது. ஹைதிராபாத்தில் இருந்து செல்லக்குடிய பிரபலமான பொழுதுபோக்கிடமாகும். இருசக்கர வாகனத்தில் அருவியின் நுழைவாயில் வரை சென்று அங்கிருந்து அருவியை சென்றடைய படிகள் கொடுக்கப்பட்டுள்ளன. நுழைவாயிலிருந்து அருவி, 10நிமிட தூரத்தில் உள்ளது.

போக்குவரத்து[தொகு]

நரிடிகொன்டா வரை அரசு போக்குவரத்து வாகனங்களில் செல்லலாம். பின்னர் தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். கயத்திரி மற்றும் பொசிரா அருவிகள் அருகில் உள்ளன.

ஹைதிராபாத்தில் இருக்கும் இராஜிவ் காந்தி பன்னாட்டு விமானநிலையம் 310கிமீ தொலைவில் உள்ளது.

அடிலாபாட் புகைவண்டி நிலையம் 58கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

References[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குன்டாலா_அருவி&oldid=2954100" இருந்து மீள்விக்கப்பட்டது