கதம் ஆறு
Jump to navigation
Jump to search
கதம் (கடம்) ஆறு (Kadam River) என்பது இந்தியாவில் தெலுங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் பாண்ட்வபூர் (பாண்டபூர் அல்லது பாண்டவபூர்) கிராமத்திற்கு அருகில் ஓடும் கோதாவரி ஆற்றின் துணை ஆறாகும்.[1]
தோற்றமும் ஆற்றோட்டமும்[தொகு]
இந்த ஆறு அடிலாபாத் மாவட்டத்தில் பசார்ஹத்னூருக்கு அருகில் உருவாகி தென்கிழக்கு பகுதிகளில் பாய்கிறது. குந்தலா என்ற இடத்தில் இந்த ஆற்றில் குந்தலா நீர்வீழ்ச்சி உள்ளது.[2] இது ஐதராபாத்திலிருந்து ஒரு நாள் பயணமாகச் சுற்றுலா செல்ல சிறந்த இடமாக உள்ளது. கடம் திட்டம் என்பது தெலங்காணா மாநிலம், அதிலாபாத் மாவட்டம், கடம் மண்டல் அருகே கோதாவரியின் கிளை நதியான கடம் ஆற்றின் குறுக்கே உள்ள ஒரு பெரிய நீர்த்தேக்கமாகும். இந்த திட்டத்திற்கு அப்பால், இந்த ஆறு கோதாவரியினை நோக்கி ஒரு நீண்ட நேர்கோட்டில் பாய்கிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Kadam River". Telangana Tourism. 1 August 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-10-17 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2017-04-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-02-26 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)