உள்ளடக்கத்துக்குச் செல்

குங்குமப் பூச்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குங்குமப் பூச்சிட்டு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கேம்பேபாசிடே
பேரினம்:
பெரிக்ரோகோடசு
இனம்:
பெ. இசுபெசியோசசு
இருசொற் பெயரீடு
பெரிக்ரோகோடசு இசுபெசியோசசு
இலாதம், 1790

குங்குமப் பூச்சிட்டு (Scarlet Minivet, Pericrocotus speciosus) என்பது சிறிய பசிரின் பறவை. இப்பறவை வெப்பவலய தென் ஆசியா முதல் கிழக்கு இந்திய உபகண்டம், தென் சீனா, இந்தோனேசியா, பிலிப்பீன்சு வரை காணப்படுகின்றது.

விளக்கம்

[தொகு]

பெரிக்ரோகோடசு இசுபெசியோசசு என்பது சுமார் 22 செ.மீ. நீளம் வரை வளரக்கூடிய பறவையாகும். கருஞ்சிவப்பு மின்சிட்டுகள் என்றும் இவை அழைக்கப்படுகிறது. ஏனெனில் ஆண் பறவையின் அடிப்பகுதிகளும் வால் விளிம்புகளும் கருஞ்சிவப்பு சிறத்தில் காணப்படுகின்றன. ஆனால் பெண் பறவைகளில் மஞ்சள் நிற அடிப்பகுதி, வால் விளிம்புகள், தொடைப்பகுதி மற்றும் இறக்கை திட்டுகள், மேலே சாம்பல் நிறத்துடன் காணப்படும். மேலும், இது வலுவான கருமையான அலகினையும் மற்றும் நீண்ட இறக்கைகளையும் கொண்டது. இதன் முக்கிய உணவு பூச்சிகள் ஆகும்.[2]

வகைப்பாட்டியல்

[தொகு]

இந்த சிற்றினத்தில் கணிசமான புவியியல் மாறுபாடு உள்ளது. பல பிரிக்கப்பட்ட துணையினங்கள் உள்ளன. சுமார் பத்தொன்பது துணையினங்கள் விவரிக்கப்பட்டுள்ளன:

  • இசுபேசியோசு (லாதம், 1790); இமயமலை[3]
    • பிராடர்குலசு சுவின்ஹோ, 1870 இந்தியாவின் வடகிழக்கில் காணப்படுகிறது மற்றும் மியான்மர், யுன்னான் மற்றும் ஹைனான் வரை[4]
    • செமிரூபர் விசிடெலர் & கைனியர், 1933 தெற்கு மியான்மர் மற்றும் தாய்லாந்து[5]
    • அந்தமானென்சிசு பீவான், 1867 - அந்தமான் தீவுகள்[6]
  • போகியென்சிசு பட்டுர்லின், 1910 தென்கிழக்கு சீனா
  • பிளாமிபர் ஹியூம், 1875 தெற்கு மியான்மர், தெற்கு தாய்லாந்து மற்றும் தீபகற்ப மலேசியா[7]
  • சாந்தோகேசுடர் (ரபீல்சு, 1822) தீபகற்ப மலேசியா மற்றும் சுமத்ராவின் தெற்குப் பகுதி[8]

பல தனிமைப்படுத்தப்பட்ட தீவுகளில் காணப்படும் துணையினங்கள் விவரிக்கப்பட்டுள்ளன:

  • மினிதோமெலசு, ஓபர்கோல்செர், 1912-சுமத்ராவிற்கு அப்பால் உள்ள சிமியூல் தீவு[9]
  • மோடிகிலானீ, சால்வாதோரி, 1892 எங்கானோ தீவு[10]
  • இன்சுலனசு டீக்னன், 1946 போர்னியோ[11]
  • சைபெர்சி ரெய்ன்ச், 1928 ஜாவா மற்றும் பாலி[12]
  • எக்சுல் வாலசு, 1864 லோம்போக்கி[13]
  • நோவசு மெக்கிரிகர், 1904 லுசான் மற்றும் நீக்ரோசு[14]
  • லேடென்சிசு ஸ்டீயர், 1890 சமர், லெய்ட் மற்றும் போஹோல்[15]
  • கோன்சலேசி ரிப்லி & ராபர், 1961 என் & இ மிண்டனா[16]
  • நைக்ரோலுடெலசு பார்கீசு, 1981 தென் மத்திய மிண்டானா[17]
  • ஜான்ஸ்டோனியா ஓகில்வி-கிராண்ட், 1905 தென்கிழக்கு மிண்டானாவோவில் உள்ள மவுண்ட் அப்போ[18]
  • மார்ச்சே கில்மார்ட், 1885 சுலு தீவுக்கூட்டம்[19]

சூழலியல் மற்றும் நடத்தை

[தொகு]

குங்கும பூச்சிட்டுக்கள் மரங்களில் உள்ள பூச்சிகளை பறந்து பிடிப்பதன் மூலமோ அல்லது அமர்ந்திருக்கும்போது பிடிக்கிறது. இது இதன் இறக்கைகளை கடுமையாக அடித்து இலைகளிலிருந்து பூச்சிகளை வெளியேற்றுகிறது. குங்கும பூச்சிட்டுகள் சிறிய கூட்டங்களாகக் காணப்படும். இதன் ஓசை இனிமையானது. இந்த பறவை மரத்தின் உச்சியில் கூடு கட்டுகிறது. கூடு என்பது சிறிய மரக்கிளைகள் மற்றும் சிலந்தி வலைகளால் பின்னப்பட்ட கோப்பை போன்ற அமைப்பாகும். புள்ளிகள் கொண்ட வெளிர் பச்சை நிற முட்டைகள் இரண்டு அல்லது மூன்றினை இடுகின்றன. அடைகாத்தல் முக்கியமாக பெண் பறவைகளால் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் ஆண் பெண் என இரண்டு பறவைகளும் தமது சந்ததிகளை வளர்க்கின்றன.

உசாத்துணை

[தொகு]
  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2004). Pericrocotus flammeus. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 9 May 2006. Database entry includes justification for why this species is of least concern
  2. "Pericrocotus speciosus". Malaysia Biodiversity Information System (MyBIS) (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-09.
  3. "Pericrocotus speciosus speciosus (Latham 1790) - Encyclopedia of Life". eol.org. பார்க்கப்பட்ட நாள் 2022-06-09.
  4. "Pericrocotus speciosus fraterculus Swinhoe 1870 - Encyclopedia of Life". eol.org. பார்க்கப்பட்ட நாள் 2022-06-09.
  5. "Pericrocotus speciosus semiruber Whistler & Kinnear 1933 - Encyclopedia of Life". eol.org. பார்க்கப்பட்ட நாள் 2022-06-09.
  6. "Pericrocotus speciosus andamanensis Beavan 1867 - Encyclopedia of Life". eol.org. பார்க்கப்பட்ட நாள் 2022-06-09.
  7. "Pericrocotus speciosus flammifer Hume 1875 - Encyclopedia of Life". eol.org. பார்க்கப்பட்ட நாள் 2022-06-09.
  8. "Pericrocotus speciosus xanthogaster (Raffles 1822) - Encyclopedia of Life". eol.org. பார்க்கப்பட்ட நாள் 2022-06-09.
  9. "Pericrocotus speciosus minythomelas Oberholser 1912 - Encyclopedia of Life". eol.org. பார்க்கப்பட்ட நாள் 2022-06-09.
  10. "Pericrocotus speciosus modiglianii Salvadori 1892 - Encyclopedia of Life". eol.org. பார்க்கப்பட்ட நாள் 2022-06-09.
  11. "Pericrocotus speciosus insulanus Deignan 1946 - Encyclopedia of Life". eol.org. பார்க்கப்பட்ட நாள் 2022-06-09.
  12. "Pericrocotus speciosus siebersi Rensch 1928 - Encyclopedia of Life". eol.org. பார்க்கப்பட்ட நாள் 2022-06-09.
  13. "Pericrocotus speciosus exul Wallace 1864 - Encyclopedia of Life". eol.org. பார்க்கப்பட்ட நாள் 2022-06-09.
  14. "Pericrocotus speciosus novus McGregor 1904 - Encyclopedia of Life". eol.org. பார்க்கப்பட்ட நாள் 2022-06-09.
  15. "Pericrocotus speciosus leytensis Steere 1890 - Encyclopedia of Life". eol.org. பார்க்கப்பட்ட நாள் 2022-06-09.
  16. "Pericrocotus speciosus gonzalesi Ripley & Rabor 1961 - Encyclopedia of Life". eol.org. பார்க்கப்பட்ட நாள் 2022-06-09.
  17. "Pericrocotus speciosus nigroluteus Parkes 1981 - Encyclopedia of Life". eol.org. பார்க்கப்பட்ட நாள் 2022-06-09.
  18. "Pericrocotus speciosus johnstoniae Ogilvie-Grant 1905 - Encyclopedia of Life". eol.org. பார்க்கப்பட்ட நாள் 2022-06-09.
  19. "Pericrocotus speciosus marchesae Guillemard 1885 - Encyclopedia of Life". eol.org. பார்க்கப்பட்ட நாள் 2022-06-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குங்குமப்_பூச்சிட்டு&oldid=3769799" இலிருந்து மீள்விக்கப்பட்டது