கீதா சாகல்
கீதா சாகல் | |
---|---|
![]() 2017 சூலையில் இலண்டனில் சாகல் ஒரு கூட்டத்தில் பேசுகிறார். | |
பிறப்பு | 1956/1957 (அகவை 68–69) மும்பை |
தேசியம் | பிரிட்டிசு இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | கீழை மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளி [1] |
பணி | எழுத்தாளர், பத்திரிகையாளர், திரைப்பட இயக்குநர், மனித உரிமை ஆர்வலர். |
பெற்றோர் | நயந்தரா சாகல் (தாயார்) |
உறவினர்கள் | விஜயலட்சுமி பண்டித் (பாட்டி); ஜவகர்லால் நேரு பெரிய மாமா) |
கீதா சாகல் ( Gita Sahgal) ( பிறப்பு: 1956/1957) இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த இவர்,[2][3] பெண்ணிய, அடிப்படைவாத, இனவாத, எழுத்தாளரும், பத்திரிகையாளரும், ஆவணப்பட திரைப்பட இயக்குநரும், பெண்கள் உரிமைகள் ஆர்வலரும், மனித உரிமை ஆர்வலருமாவார்.[4][5]
இவர் பெண்கள் அமைப்புகளின் இணை நிறுவனராகவும் தீவிர உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவர் பன்னாட்டு மன்னிப்பு அவையின் பாலின பிரிவின் தலைவராகவும் இருந்து வருகிறார். குறிப்பாக மத அடிப்படைவாதிகளால் பெண்கள் எதிகொள்ளும் அடக்குமுறையை எதிர்த்தார்.[6][7]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]
கீதா சாகல் புதின ஆசிரியர் நயந்தரா சாகலின் மகளாக இந்தியாவில் பிறந்தார். அவர் ஒரு இந்துவாக வளர்க்கப்பட்டார். இப்போது இவர் தன்னை ஒரு நாத்திகர் என்று கூறுகிறார்.[4] இவர் முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பெரிய மருமகளும், மற்றும் அவரது சகோதரி விஜயலட்சுமி பண்டிட்டின் பேத்தியுமாவார்.[8][9] முதலில் இந்தியாவில் படித்த இவர், 1972 இல் இங்கிலாந்து சென்றார். அங்கு இவர் லண்டனில் உள்ள கீழை மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியில் பட்டம் பெற்றார்.[1] இவர் 1977 இல் இந்தியா திரும்பி, குடிமை உரிமைகள் இயக்கத்தில் பணியாற்றத் தொடங்கினார். இவர் 1983 இல் மீண்டும் இங்கிலாந்து சென்றார்.
பெண்கள் அமைப்புகள்
[தொகு]1979 ஆம் ஆண்டில் இவர் மேற்கு லண்டனின் சவுத்தாலில் அமைந்துள்ள ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான சவுத்தால் பிளாக் சிஸ்டர்ஸ் என்பதை அமைப்புடன் இணைந்து பணியாற்றினார்.[10]
1989 ஆம் ஆண்டில் இவர் அடிப்படைவாதத்திற்கு எதிரான பெண்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.[4] பிரிட்டனை கிறிஸ்தவத்தையும் அதன் நிந்தனைச் சட்டங்களையும் மட்டுமே பாதுகாப்பதாக அது விமர்சித்துள்ளது. புலம்பெயர்ந்த மதங்களுக்கான பாதுகாப்பை விலக்குவது குறுங்குழுவாதத்தின் வளர்ச்சிக்கும், புலம்பெயர்ந்தோர் மத அடிப்படைவாதத்தை நோக்கி திரும்புவதற்கும் பங்களிக்கிறது என்று இவர் நம்புகிறார்.

மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 .
- ↑ Mark Townsend (25 April 2010). "Gita Sahgal's dispute with Amnesty International puts human rights group in the dock | World news". https://www.theguardian.com/world/2010/apr/25/gita-sahgal-amnesty-international. பார்த்த நாள்: 27 April 2010.
- ↑ Hasan Suroor (9 February 2010). "Suroor, Hasan, "Amnesty in row over "collaborating" with pro-jehadis", The Hindu, 9 February 2010. Retrieved 16 February 2010". http://www.thehindu.com/news/international/article103279.ece. பார்த்த நாள்: 18 March 2010.
- ↑ 4.0 4.1 4.2 Guttenplan, D.D.; Margaronis, Maria. "Who Speaks for Human Rights?". http://www.thenation.com/article/who-speaks-human-rights/. பார்த்த நாள்: 12 March 2016.
- ↑ Yuval-Davis, Nira; Kannabiran, Kalpana; Kannabirān, Kalpana; Vieten, Ulrike; Kannabiran, Professor Regional Director Council for Social Development Kalpana (2006-08-10). The situated politics of belonging – Google Books. ISBN 9781412921015. Retrieved 4 March 2010.
- ↑ "Women Against Fundamentalisms | Variant 16". Variant.org.uk. Retrieved 4 March 2010.
- ↑ Amit Roy (10 February 2010). "The Telegraph – Calcutta (Kolkata) | Amnesty suspends Nehru kin". The Telegraph. Calcutta. Retrieved 4 March 2010.
- ↑ "Amnesty suspends Nehru kin Gita Sahgal – NewsofAP.com – Andhra Pradesh News, Andhra News, Andhra Pradesh, Telugu News". NewsofAP.com. Archived from the original on 14 July 2011. Retrieved 4 March 2010.
- ↑ "The Hindu : News / International : Amnesty in row over "collaborating" with pro-jehadis". http://www.thehindu.com/news/international/article103279.ece. பார்த்த நாள்: 4 March 2010.
- ↑ ""Who Are SBS?", Southall Black Sisters. Retrieved 28 February 2010". Southallblacksisters.org.uk. Retrieved 18 March 2010.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Gita Sahgal: A Statement", 7 February 2010
- Human Rights for All website பரணிடப்பட்டது 2020-07-27 at the வந்தவழி இயந்திரம்
- "Dangerous liaisons", Gita Sahgal, DNA India, 18 April 2010