அடிப்படைவாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அடிப்படைவாதம் என்பது, ஒரு நம்பிக்கை மீது ஆழமானதும், முழுமையானதுமான ஈடுபாடு கொண்டிருத்தல்; சில அடிப்படைக் கொள்கைகளைக் கடுமையாகக் கடைப்பிடித்தல்; தற்கால சமூக, அரசியல் வாழ்க்கை முறைகளுக்காக கொள்கைகளை விட்டுக்கொடுப்பதற்கு எதிரான எதிர்வினை போன்றவற்றைக் குறிக்கும்.

அடிப்படைவாதம் என்பது முதலில் 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஐக்கிய அமெரிக்காவில், புரட்டஸ்தாந்த கிறிஸ்தவ மதப் பிரிவினரில் ஒரு பகுதியினரிடையே உருவான ஒரு தொகுதி நம்பிக்கைகளைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டது. இதன் மூலத்தை அக்காலத்தில் எழுந்த அடிப்படைவாதம், நவீனம் தொடர்பான சர்ச்சைகளிலே காணமுடியும். அடிப்படைவாத வழிமுறைகளைக் கைக்கொள்ளும் ஒருவர் அடிப்படைவாதி எனப்பட்டார்.

பிற்காலத்தில் இச் சொல் பொதுமைப்படுத்தப்பட்டு எந்த ஒரு தொகுதி நம்பிக்கைகளையும் இறுக்கமாகப் பின்பற்றுபவர்களைக் குறித்தது. எனினும், மதம் தொடர்பான நம்பிக்கைகள் தொடர்பிலேயே இதன் பயன்பாடு இருந்தது. இச் சொல்லைக் கிறிஸ்தவம் தொடர்பில் மட்டுமே பயன்படுத்த வேண்டுமென விரும்பிய கிறிஸ்தவர்கள் சிலர் பிற மதத்தினரையும் இச் சொல்லால் பொதுவாகக் குறிப்பதை விரும்பவில்லை.

அடிப்படைவாதம் என்பதைப் பெரும்பாலும், குறிப்பாகப் பிற அடைமொழிகளுடன் வரும்போது எதிர்மறைக் குறிப்புத் தோன்றவே பயன்படுத்துகின்றனர். வலதுசாரி அடிப்படைவாதம், முஸ்லிம் அடிப்படைவாதம், இந்து அடிப்படைவாதம் போன்ற தொடர்கள் இதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிப்படைவாதம்&oldid=2266800" இருந்து மீள்விக்கப்பட்டது