கிழக்கு கொல்கத்தா பெண்கள் கல்லூரி

ஆள்கூறுகள்: 22°36′07.19″N 88°24′10.81″E / 22.6019972°N 88.4030028°E / 22.6019972; 88.4030028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிழக்கு கொல்கத்தா பெண்கள் கல்லூரி
படிமம்:East Calcutta Girl's College.jpg
வகைஇளங்கலை மற்றும் முதுகலை
உருவாக்கம்1992 (1992)
அமைவிடம்
லேக் டவுன், கொல்கத்தா
, ,
இந்தியா

வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புமேற்கு வங்க மாநில பல்கலைக்கழகம்
இணையதளம்ecgcollege.in
கிழக்கு கொல்கத்தா பெண்கள் கல்லூரி is located in மேற்கு வங்காளம்
கிழக்கு கொல்கத்தா பெண்கள் கல்லூரி
Location in மேற்கு வங்காளம்
கிழக்கு கொல்கத்தா பெண்கள் கல்லூரி is located in இந்தியா
கிழக்கு கொல்கத்தா பெண்கள் கல்லூரி
கிழக்கு கொல்கத்தா பெண்கள் கல்லூரி (இந்தியா)

கிழக்கு கொல்கத்தா பெண்கள் கல்லூரி,என்பது மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் 1992 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு மகளிர் கல்லூரியாகும். வணிகம், கலை மற்றும் அறிவியல் ஆகியப்பிரிவுகளில் இளங்கலை படிப்புகளை வழங்கும் இக்கல்லூரி, மேற்கு வங்காள மாநில பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [1].


பெண்களின் சமூக வாழ்க்கை மற்றும் கல்விக்கான பகுத்தறிவு, தாராளவாத, நடைமுறை மற்றும் மனிதாபிமான அணுகுமுறையை பின்பற்றும் இக்கல்லூரியில், தகுதி வாய்ந்த மற்றும் அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களின் மூலம் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது.


நன்கு விசாலமான, காற்றோட்டமான வகுப்பறைகள், நவீன வசதிகளுடன் கூடிய கணிணி ஆய்வகம், நன்கு பராமரிக்கப்படும் விளையாட்டு மைதானம் மற்றும் பசுமையான கல்லூரி வளாகம் , நன்கு பராமரிக்கப்பட்ட ஆய்வகங்கள், சுமார் 13000 புத்தகங்கள், மின் புத்தகங்கள் மற்றும் பருவ இதழ்களுடன் கூடிய நூலகம், விரிவான தொழில் ஆலோசனைப் பட்டறைகள் மற்றும் வளாக ஆட்சேர்ப்பு இயக்கங்கள் போன்ற வசதிகளோடு, பல்வேறு அரசு உதவித்தொகைகளைச் மாணவிகளுக்கு கிடைக்க உதவுவதைத் தவிர, கல்லூரி கல்வித் தேவைகளை எளிதாக்குவதற்கு கட்டணச் சலுகை, புத்தக வங்கி போன்றவைகளையும் அளிக்கிறது

துறைகள்[தொகு]

அறிவியல் பிரிவு[தொகு]

  • புவியியல்
  • வேதியியல்
  • இயற்பியல்
  • கணிதம்
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • கணினி அறிவியல்

கலைப்பிரிவு[தொகு]

  • பெங்காலி
  • ஆங்கிலம்
  • பொருளாதாரம்
  • வரலாறு.
  • அரசியல் அறிவியல்
  • தத்துவம்
  • கல்வி
  • பத்திரிக்கை
  • சமூகவியல்

வணிகப்பிரிவு[தொகு]

அங்கீகாரம்[தொகு]

இந்த கொல்கத்தா பெண்கள் கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[2] மற்றும் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலால் (என்ஏஏசி) பி++ தகுதியுடன் மூன்றாம் முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Affiliated College of West Bengal State University". Archived from the original on 2012-10-29.
  2. Colleges in WestBengal, University Grants Commission பரணிடப்பட்டது 16 நவம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம்
  3. "Institutions Accredited/ Re- accredited by NAAC whose accreditation validity period is over" இம் மூலத்தில் இருந்து 2012-05-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120512054834/http://www.naac.gov.in/sites/naac.gov.in/files/Validity_expired_institutions.pdf.