உள்ளடக்கத்துக்குச் செல்

கிறிஸ் ஆண்டெர்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறிஸ் ஆண்டெர்சன்
பிறப்பு1957
பாக்கித்தான்
படித்த இடங்கள்
  • Woodstock School
பணிவணிகர், ஆசிரியர்
வாழ்க்கைத்
துணை/கள்
Jacqueline Novogratz
இணையம்https://www.ted.com/speakers/chris_anderson_ted

கிறிஸ் ஆண்டர்சன் புகழ் மிக்க டெட் மாநாட்டின் ( "டெக்னாலஜி, என்டேர்டைன்மேன்ட், டிசைன்" என்பதன் ஆங்கில முதலெழுத்து சுருக்கம் ) TED (Technology, Entertainment, Design ) பொறுப்பாளர் ஆவார்.

இளமைக்காலம்

[தொகு]
Chris Anderson 2007

1957ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பிறந்த இவர், பிரித்தானிய நாட்டை சேர்ந்தவர். ஆண்டர்சனின் பெற்றோர் பாகிஸ்தானில் மருத்துவ சேவை செய்து வந்த காரணத்தால், இவர் தனது இளமைக் காலத்தை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் கழித்தார். பின்பு பள்ளி படிப்பை தொடர்வதற்காக இங்கிலாந்திற்கு சென்றார்.

1978ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் சித்தாந்தம், அரசியல் மற்றும் சமத்துவத்தில் பட்டம் பெற்றார்.

தொழில்

[தொகு]

அதன் பின்பு பத்திரிகைத் துறையில் சிறிது காலம் பணியாற்றினார். அச்சமயத்தில் சேஷேல்ஸ் நாட்டில் அரசினால் அங்கீகரிக்கப்படாத ஒரு வானொலி நிலையத்தில் தற்காலிகமாகப் பணியாற்றி வந்தார்.

1985 ஆம் ஆண்டு தனது சொந்த சேமிப்பிலான வெறும் 10,000 பவுண்டுகளை கொண்டு கணினி ஆர்வலர்களுக்கான ஒரு பொழுதுபோக்கு பத்திரிக்கை நிறுவனத்தை உருவாக்கினார். "ஃபியூச்சர் பப்ளிஷிங்" என்று தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் , பின்பு கணிப்பொறி தவிர சைக்ளிங், இசை, திரைப்படம், விளையாட்டு, எண்ணவியல் மற்றும் தொழினுட்பம் ஆகிய துறைகளிலும் வெளியிடத் தொடங்கியது.

1994 இல் சான் பிரான்சிஸ்கோ பே ஏரியாவிற்கு குடிபெயர்ந்த ஆண்டர்சன், 'பிசினஸ் 2.0' , விளையாட்டு இணையதளமான 'IGN.com' என்று தனது வெளியீட்டு பணியை தொடர்ந்தார். 'ஃபியூச்சர் பப்ளிஷிங்' இச்சமயத்தில் 1500 பேர் பணிபுரியும் 130க்கும் மேற்பட்ட இதழ்களை வெளியிடும் நிறுவனமாக வளர்ந்தது. 1999இல் இந்நிறுவனம் லண்டன் பங்குச் சந்தையில் பங்கு வர்த்தகத்திற்காக சேர்த்துக்கொள்ளப்பட்டது.

டேட் அமைப்பு

[தொகு]

2001 ஆம் ஆண்டு ஆண்டர்சன் 'ஃபியூச்சர் பப்ளிஷிங்'கிலிருந்து வெளியேறினார். தனது பொதுநலசேவை அமைப்பான 'தி சேப்லிங் ஃபவுண்டேஷன்' மூலம் டேட் கூட்டமைப்பை வாங்கினார். டேட் அமைப்பின் தலைப்பு வாக்கியத்தை 'பரப்பத் தகுந்த எண்ணங்கள்' ('Ideas worth spreading') என மாற்றி அமைத்தார். வருடாந்தார கூட்டமைப்பில் படம்பிடிக்கப்பட்ட பேச்சுரைகளை இலவசமாக இணையத்தில் வெளியிட்டு உலகளாவிய பார்வையாளர்களின் கவனத்தை கைப்பற்றினர். மேலும், டேட் அமைப்பு வருடந்தோறும் மூன்று சிறப்பு வாய்ந்த சிந்தனையாளர்களுக்கு 1,00,000 டாலர்களை பரிசளித்து, உலகை மாற்றும் ஒரு எண்ணத்தை பரிமாறும் சந்தர்ப்பதை அளித்து வருகிறது.

'அகுமென் ஃபண்டு' சேவை அமைப்பின் நிறுவனரான ஜாக்கேலின் நோவோகிராட்ஸ் இவரது மனைவி ஆவார். ஆண்டர்சன் தற்பொழுது நியூ யார்க் நகரத்தில் வாழ்கிறார்.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்_ஆண்டெர்சன்&oldid=3924844" இலிருந்து மீள்விக்கப்பட்டது